கார் மோதிய விபத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட பெண்

புதுச்சேரியில் பைக் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பைக்கில் வந்த பெண் ஆற்றல் தூக்கி வீசப்பட்டார். ஆற்றில் உயிருக்கு போராடிய அவரை படகு குழாம் ஊழியர்கள் படகுமூலம் அவரை மீட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

A woman on a two-wheeler was thrown into the river after being hit by a car in a road accident in Puducherry

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. தவளக்குப்பம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு உறவினருடன் இருச்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது நோனாங்குப்பம் பாலம் பகுதியில் சென்ற போது, எதிரே கடலூர் நோக்கி வந்த கார் ஒன்று பைக் மீது வேகமாக மோதியது.  

கோவையில் ஆட்டோ ஓட்டுநர் எரித்துக் கொலை; உறவினர்கள் சந்தேகம்

இதில் தூக்கி வீசப்பட்ட சரஸ்வதி, பாலத்தில் இருந்து சங்கராபரணி ஆற்றில் விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் காவல் துறையினர் விரைந்து வந்து, படகு இல்ல ஊழியர்கள் உதவியுடன், படகில் சரஸ்வதியை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்பு சரஸ்வதியையும், அவரது உறவினரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடுப்பணைக்கு கிடா வெட்டி நூற்றாண்டு விழா கொண்டாடிய கிராம மக்கள்

விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்த பெண்ணை படகு மூலம் ஊழியர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கார் ஓட்டுநரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக கடலூர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios