Asianet News TamilAsianet News Tamil

தாத்தாவை போல் யாரும் விழுந்து விடக் கூடாது; தனி நபராக சாலையை சீரமைத்த சிறுவன்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் -   பத்துகண்ணு சாலையில் முதியவர் விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் சாலையை சீரமைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

8th standard student repairing a damaged road in puducherry
Author
First Published Jan 21, 2023, 4:25 PM IST

புதுச்சேரி சேந்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60) இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வில்லினூர் - பத்துகண்ணு சாலையில் செல்லும் போது பள்ளத்தில் நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்பக்கமாக வந்த மற்றொரு வாகனம் அவர் மீது பலமாக மோதியது. இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல்லில் வளர்ப்பு நாயை நாய் என்று அழைத்த முதியவர் குத்தி கொலை

இந்நிலையில், அவரது பேரன் மாசிலாமணி என்ற சிறுவன் தனது தாத்தா விழுந்த பள்ளத்தில் மற்றவர்கள் யாரும் விழுந்து அடிப்படக்கூடாது, ஏதேனும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்று என்னி இன்று காலை சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். 

எத்தனையோ பணக்காரர்கள், அரசியல்வாதிகள் சென்றுவரும் இச்சாலையில் ஒரு சிறுவன் தனி ஒரு நபராக நின்று ஆங்காங்கே கிடக்கும் சிமெண்ட் கற்கல், சாலையோரம் உள்ள மணல் ஆகியோவற்றை கொண்டு சாலையை சீரமைத்தார். 

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய திமுக எம்எல்ஏ.க்கள்

சிறுவனின் இச்செயலை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சிறுவனை பாராட்டிவிட்டு சென்றனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios