ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தனக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்காது என்ற சந்தேகத்தில் கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதோடு அதை வீடியோவாகவும் எடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகனுக்கு அனுப்பியுள்ளார் சுனில் என்பவர்.

தொழில்ரீதியாக மருத்துவரான சுனில் ஜெகனுக்கு அனுப்பிய  அந்த வீடியொவில்,’’ ஜெகன் சார் ஐ லவ் யூ வெரி மச். ஆனால் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என வெளியான தகவல்களால் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன்.  கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்கள் வ்ழித்தடத்தைப் பின்பற்றி நடந்துவந்தவன் நான் என்பதை மறக்கவேண்டாம். தற்போது என் இறப்புக்கு முன் இந்த வீடியோவை உங்களுக்கு அனுப்புகிறேன்'என்று தெரிவித்திருக்கிறார்.  

கடந்த சில வாரங்களுக்கு முன்பு  23 எம்.எல்.ஏ.க்களுடன் சுனில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்குச் செல்ல  சுனில் முயன்றதாகவும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் சுனில் கட்சியில் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் சுனிலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்கிறார்கள்.

தனக்கு வாய்ப்பு மறுக்கப்படும் செய்திகள் காட்டுத்தீ போல் பரவியதால் சுனில் சில தினங்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், சில எம்.எல்.ஏ.க்களுடன் தெலுங்கு தேசம் கட்சிக்கு அவர் தாவ இருந்ததாக சொல்லப்படு செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.