தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சி பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதிமுக கட்சி இரண்டாக உடைந்த பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் பிரிந்து இணைந்தனர். பிறகு டிடிவி.தினகரன் தனிமைப்படுத்தப்பட்டார். பிறகு ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக நின்று குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு  மாபெரும் வெற்றி பெற்று தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைத்தார். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். 

இதனிடையே ஒரு இளைஞரிடம் தம்பி நீங்க இவ்வளவு தீவிரமாக  தினகரனை ஆதரிக்கிறீங்க ஏன்  என கேள்வி எழுப்பிய போது, அவர் அளித்த பதில் வியப்பளிக்க வைத்துள்ளது. நான் ஒரு இளைஞன், இளைஞர்கள் கிட்ட போய் உங்களுக்கு காந்தி பிடிக்குமா..? நேதாஜி பிடிக்குமானு..? கேட்டுப் பாருங்க 90% இளைஞர்கள் நேதாஜியை தான் பிடிக்கும் என்பார்கள். ஏனென்றால் அடிமையை விட எதிர்த்து அடிப்பதே பிடிக்கும் என்றார். அப்படி என்றால் தினகரன் யாரை எதிர்த்து என்ன சாதிச்சிட்டார்னு அவர் கேள்வி எழுப்பினார். 

ஆர்.கே.நகர் தேர்தல் பற்றி அனைவருமே அறிந்த ஒன்று. ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் ஜெயிக்கக் கூடாது என்று மத்திய அரசு, மாநில அரசு, காவல்துறை உள்ளிட்ட வை தீவிரம் காட்டி வந்தது. இடைத்தேர்தல் வந்தாலே  பணம் விளையாடும் என்பது அனைவரும் அறிந்தது. இடைத்தேர்தல் வந்தாலே ஆளுங்கட்சியினர் வெற்றி பெறுவதே வழக்கமான ஒன்று. அப்படி இருக்கும் போது பயந்து போய் வேறொரு வேட்பாளரை நிறுத்தாமல் ஆர்.கே.நகரில்  தினகரன் நின்றார். 

அதுமட்டும் இல்லாமல்  தான் விரும்பிய  சின்னம் கிடைக்காமல் கிடைத்த சின்னத்தை வாங்கிக்கொண்டு  எல்லா அடக்குமுறைகளையும் அடித்து நொறுக்கி ஆர்.கே.நகரில் மாபெரும் வெற்றி பெற்றார். திமுக உள்ளிட்ட கட்சிகளை டெபாசிட் இழக்க வைத்தார். மேலும் மத்திய அரசு மூலமாக வருமானவரித்துறையை ஏவி அடங்கு முறையில் ஈடுபட்டது. ஆனால் எதுக்கும் சளிக்காமல் மத்திய அரசை விமர்சனம் செய்தார். அவர்களது ஒவ்வொரு பந்தையும் சிக்சருக்கு விரட்டினர். ஜெயலலிதாவை போன்ற வீரம் மிக்க பேச்சு என அனைத்து விதத்திலும்  இளைஞர்களை கவர்ந்துள்ளது.