கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டி, போராட்டத்தில் பங்கேற்கும் சிறுபான்மை முஸ்லிம்களை எச்சரிக்கும் வகையில் பகிரங்கமாக தனது கருத்தை தெரிவித்தார்.

‘குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. நாங்கள் 80 சதவீதம், நீங்கள் (முஸ்லிம்கள்) 18 சதவீதம். நாங்கள் நடவடிக்கை எடுத்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். 

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராக நீங்கள் சென்றால், அது நன்றாக இருக்காது. நீங்கள் விரும்பினால், பாகிஸ்தானுக்கு போகலாம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதேசமயம் வேண்டுமென்றே நாங்கள் உங்களை அனுப்ப மாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.