திமுகவில் நடக்கும் உண்மை நிலையை அவரது பேச்சு கிழித்து தொங்கவிட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது பேச்சு இதோ, 
‘’30 வருஷமா திமுகவுக்காக பேசிக்கிட்டு இருக்கிற இந்த பவானி வட்டச்செயலாளர் ஆக முடியல. ஆக முடியலைனு சொல்றதை விட ஆக விடல. அது வேற விஷயம் அதை அப்புறம் பேசிக்கலாம். எப்ப தேர்தல் வைத்தாலும் நாம ஜெயிச்சிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்ப சொல்றேன் கேட்டுக்க நீ என்ன விக்டோரியா மகாராணியின் பேரனா?

 

எத்தனை நாளைக்கு நான் உங்களுக்கே ஓட்டுக் கேட்கிறது. செந்தில்பாலாஜிக்கு உதயசூரியன் சின்னத்துல ஓட்டுப்போடுங்க. ஜோதிமணிக்கு கை சின்னத்துல ஓட்டுப்போடுங்க. சின்னச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்துல ஓட்டுப்போடுங்கனு நான் எத்தனை நாளைக்கு கேட்கிறது? எனக்கு நான் ஓட்டுக்கேட்கணும்கிறேன்.  உடனே எனக்கு வாய் கொஞ்சம் அதிகம்னு சொல்றாய்ங்க. நான் உடனே கேட்டேன் ஏன் நீயும், உங்க அப்பனும்தான் எலெக்சன்ல நிற்கணுமா?னு கேட்கிறேன். என் பி.ஏ.,வை கூப்பிட்டேன். 

எதுக்குடா அவங்க நிற்கிறாங்கனு கேட்டேன். குடுத்து விடுடா பளார்னு ரெண்டு கொடுத்து விடுடானேன். கொடுத்து விடுடா ஒரு பிரியாணி பொட்டலம், 100 ரூபாய், ஒரு குவாட்டரை கொடுத்து விடுடானு சொன்னேன். அதையும் வாங்கி வைச்சிக்கிட்டாய்ங்க’’என அவர் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் எதுவும் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தபடி நெழிந்தனர்.