Asianet News TamilAsianet News Tamil

தலைவர்களின் பிறந்த நாட்களில் இனி அரசு விடுமுறை இல்லை …யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி…

Yogi next plan
yogi next-plan
Author
First Published Apr 15, 2017, 6:21 AM IST


பிரபல தலைவர்களின் பிறந்த தினங்களில் பள்ளிக் கூடங்களுக்கு இனி விடுமுறை  அளிக்கப்பட மாட்டாது என உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அண்ணல் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

அப்போது, பேசிய அவர், பிரபல தலைவர்களின் பிறந்த நாட்களில் பள்ளிக் கூடங்களுக்கு இனி விடுமுறை அளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.

இதே நேரத்தில் அந்த தலைவர்களின் வாழ்க்கை குறித்தும், அவர்கள் ஆற்றிய அரும் பணிகள் குறித்தும் அன்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் எனறும் தெரிவித்தார்.

.தலைவர்களின் பிறந்த தினங்களையொட்டி அளிக்கப்படும் விடுமுறைகள் அதிகரிக்கப்படுவதால், மாணவர்கள் கல்வி கற்கும் காலம் சுருங்குகிறது என்றும் ஆதித்யநாத் தெரிவித்தார்.

.இதுபோன்ற விடுமுறைகளால், மாணவர்கள் கல்வி கற்கும் காலம் 220 நாள்கள் என்பதில் இருந்து 120 நாள்களாக குறைந்துள்ளது என கூறினார்.

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்ற மத்திய அரசின் நடவடிக்கை, சட்ட மேதை அம்பேத்கரின் பொருளாதார சிந்தனையை அடியொற்றியது எனவும் யோகி கூறினார்.

ஒரு ஜனநாயக நாடு, தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், கருப்புப் பணத்தை தடுக்கவும் விரும்பினால், உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை சீரான இடைவெளிகளில் மாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் வார்த்தைகளைத்தான் மத்திய அரசு தற்போது பின்பற்றி வருகிறது எனவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios