கலைஞரின் உடல் நலம் கடந்த சில ஆண்டுகளாக நலிவடைந்து காணப்பட்டதை அடுத்து, அவர் வீட்டிலேயே வில் சேரில் அமர்ந்தவாறு தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கருணாநிதியில் உடல் நலிவடைந்து உள்ளது என காவேரி மருத்துவமனை அறிவித்து இருந்தது.

தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி. இதற்கிடையில் அவர் உடனான, பல்வேறு  இனிமையான சம்பவங்களை நினைவு கூறும் வகையில் பல  விஷயங்கள் வெளி கொணரப்பட்டு உள்ளது

சமீபத்தில்,கலைஞர் அவர்கள் அவருடைய பேரன் உடன் பந்து தூக்கி போட்டு விளையாடுவது போல வீடியோ வெளியானது.

அதன் பிறகு மருத்துவர் எழிழன் அவர்களின் மனைவி மக்கள் வந்திருந்த போது, அவருடைய மகளிடம் நான் யார் என கேட்கிறார்

அதற்கு அந்த சிறுமி, கலைஞர் என பதில் கூற, கை கொடுத்து சிரிக்கிறார்...

பிறகு மு.க தமிழரசு மகள் பூங்குழலி "ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்"....கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம்  தாலாட்டும்" என்ற பாடலை கலைஞருக்காக அவர் பாடினார்.

பாடல் முழுவதும் கேட்ட பின், அருமையாக இருக்கிறது கலைஞர் புன்னகைக்கும்  வீடியோ ஏற்கனவே வெளிவந்தாலும், தற்போது அவருடனான நினைவுகள்  அனைவரையும் நெகிழ வைக்கும் விதமாக அமைந்துள்ளது.