எமனே என்னிடம் உயிர் பிச்சை கேட்க வேண்டும் ..! 3 வருடத்திற்கு முன்பே பேசிய கலைஞர்..!

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக, அன்பழகன் மற்றும் கருணாநிதி பங்குபெற்ற நிகழ்ச்சியில் இறப்பு குறித்து, அன்றே பேசி உள்ளார் கருணாநிதி.

அப்போது தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய கலைஞர்....

என்னுடைய பிராணம்...ஐதீகத்தில் நம்புவது போல...எமன் பறித்துக் கொள்ள முடியும் என்பதில்லை..அப்படி பறித்துக்கொள்ள முடியாது என்று நான் சொல்கிறேன்...

என்ன நெஞ்சழுத்தம்..என்ன ஆணவம்...என்ன அகங்காரம்....என  நினைக்கிறீர்களா..?

காரணம் சொல்கிறேன் கேளுங்கள்.

தமிழை வளர்க்க வேண்டும்

தமிழர்களை இன்னும் நலமாக வாழ வைக்க வேண்டும்  என்பதற்காக, தாய் நாட்டு பற்று தாய் மொழி பற்று கொண்டவன் நான்...

எமன் தன் பிராணம் எடுக்க எந்த வழியில் வர முடியும்....?

உறவினர் போலவோ...உற்றார் போலவோ.. கயவனாகவோ வந்து என் உயிரை கொண்டு செல்ல முடியாது....அதற்கு மாறாக, உயிரை என்னிடம் பிச்சை கேட்டு எடுத்து செல்ல வேண்டும்....அதாவது  தமிழுக்காக, தமிழ் புலவருக்காக உயிரை பிச்சை கொடுத்த வரலாறு உண்டு....அப்படி இரு கட்டத்தில் தான் நான் உயிரை கொடுப்பேன்...

வேறு யாருக்காகவும், எதற்காகவும் அந்த உயிரை தர மாட்டேன்.. 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வேன்...அதற்கு முன்னதாக  கொடுக்க வேண்டும்என்றால் அது தமிழுக்காக, தமிழர்களுக்காக,  தமிழ் நாட்டுக்காக, தமிழ் பண்பாட்டுக்காக, தமிழ் இலக்கியத்திற்காக தமிழ் கலைக்காக என தன் மரணத்தை பற்றி, 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 தேதி, கருணாநிதியும், க.அன்பழகனும் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் இவ்வாறு பேசி உள்ளார் கருணாநிதி.