திமுக  தலைவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றதைப்போல, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு  திரும்ப பெற்றுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இசட் பிளஸ் பாதுகாப்பில் அதிக அளவில் கமாண்டோ படையினர் பாதுகாப்பு வழங்கிவந்தனர். இதேபோல துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அதாவது, குறைந்த அளவிலான கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 
அந்தப் பாதுகாப்பை திரும்ப பெற மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து இருவருக்கும் வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பு முறைப்படி வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதிமுக பிளவுப்பட்டபோது பன்னீர்செல்வத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கோரி மத்திய அரசின் பாதுகாப்பு கோரப்பட்டதால், பன்னீர்செல்வதுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.