மதுரை அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகிற 17ம் தேதி நாடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாடுபிடிவீரர்களுக்கு அனுமதிசீட்டு வழங்கும் பணி இன்று தொடங்கியது. 

இதனையொட்டி மாடுபிடிவீரர்கள் அதிக எண்ணிக்கையில் வர தொடங்கினர்.. 700 மாடுபிடிவீரர்களுக்கு மட்டுமே அனுமதிசீட்டு வளங்கப்பட்டது... 21 வயதுக்கு மேலும் 40 வயதுக்கு உட்பட்டவர் மட்டுமே அனுமதிக்க படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களின்  உடல் எடை ,  மருத்துவ பரிசோதனை ,  என அனைத்தும் எடுக்கப்பட்டு பின்னர் தகுதியுள்ளவருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

 

அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் வளர்மதி தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனைகளை செய்து வருகின்றனர் வருவாய் துறையினர் பதிவு செய்து அனுமதி சீட்டு வழங்கி வருகின்றனர்.