Asianet News TamilAsianet News Tamil

இந்த 3 மாவட்ட மக்களும் மிக கவனமாக இருக்கவும்..!! அடித்து நொறுக்க போகுது என எச்சரிக்கை..!!

அக்டோபர் 13,14 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

Works to begin as soon as Japan's financial aid arrives: Minister's Action on Ames Hospital
Author
Chennai, First Published Oct 13, 2020, 1:41 PM IST

நேற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 7 மணி அளவில் ஆந்திர கடற்கரை காக்கிநாடா அருகே கரையை கடந்தது. தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது, இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Works to begin as soon as Japan's financial aid arrives: Minister's Action on Ames Hospital

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்சும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்சையும் ஒட்டி பதிவாக கூடும், கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை, (கோவை) 11 சென்டி மீட்டர் மழையும், சின்னக்கல்லார் (கோவை) 9 சென்டிமீட்டர் மழையும், சோலையார் (கோவை) நடுவட்டம் (நீலகிரி) தலா 8 சென்டி மீட்டர் மழையும், அவலாஞ்சி (நீலகிரி) சின்கோனா (கோவை) தலா 7 சென்டிமீட்டர் மழையும் சோளிங்கர் (ராணிப்பேட்டை) சுராலகோடு (கன்னியாகுமரி) பெரியாறு (தேனி) பாபநாசம் (திருநெல்வேலி) தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

Works to begin as soon as Japan's financial aid arrives: Minister's Action on Ames Hospital

அக்டோபர் 13,14 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 13-10-2020 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 2.8 முதல் 3.8 மீட்டர் வரை எழும்பக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios