ஸ்டாலின் சென்ற ரயிலில் பெண் செய்த காரியம்! திடீரென நின்ற ரயில்! உஷாரான முதல்வரின் பாதுகாவலர்கள்!நடந்தது என்ன?
வேலூரில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ரயில் மூலம் காட்பாடிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொண்டார். பின்னர், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றிரவு 7 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டார்.
வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்த ரயிலில் பெண் ஒருவர் தவறுதலாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ரயில் மூலம் காட்பாடிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொண்டார். பின்னர், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றிரவு 7 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டார்.
இதையும் படிங்க;- பாஜக இருக்கும் துணிச்சலில்தான் சீமான் இப்படி பேசுகிறார்.. அவரின் திமிரை அடக்கியே தீரணும்.. சுப.வீரபாண்டியன்.!
அபாய சங்கிலி மூலம் ரயில் நிறுத்தம்
அப்போது, ரயில் முகுந்தராயபுரம் சென்றுக்கொண்டிருந்த போது ரயிலில் திடீரென யாரோ ஒருவர் அபாய சங்கலியை பிடித்து இழுத்தனர். இதனால், ரயில் நிறுத்தப்பட்டது. உடனே முதல்வரின் பாதுகாவலர்கள் உஷாராகினர். இதனையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் முதல்வரின் பாதுகாவலர்கள் உடனடியாக ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க;- நான் வேட்பாளராக ஒப்புக்கொண்டதற்கு இது தான் காரணம்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் சொன்ன பரபரப்பு தகவல்..!
5 நிமிடங்கள் தாமதம்
அப்போது, அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது பொதுப்பெட்டியில் பயணம் செய்த பெண் ஒருவர் என்பது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டதில் தனது லக்கேஜை எடுக்கும்போது, கை தவறுதலாக பட்டுவிட்டதாக கூறியிருக்கிறார். இதனையடுத்து, அபாய சங்கிலியை இழுத்த பெண்ணுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் ரயில் புறப்பட்டது.