Asianet News TamilAsianet News Tamil

பெண்ணின் அடர்க்கூந்தலுக்கு விளக்கம் சொல்லி தமிழுக்கு பெருமை... அசத்தும் ஹெச்.ராஜா..!

வேய்ங்குழல் என போற்றப்படும் பெண்ணின் கூந்தலுக்கு பெயர்க்காரணம் கூறி விளக்கமளித்து தமிழின் பெருமையை எடுத்துக் கூறியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. 

woman's hair is proud of Tamil says H.Raja
Author
Tamil Nadu, First Published Nov 27, 2019, 11:48 AM IST

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’தமிழை கொண்டாடுவோம். "வே”என்ற ஒற்றைத்‌ தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும். தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது. மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.

woman's hair is proud of Tamil says H.Raja

சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. 'வே'ய்தலும் அப்படித்தான். சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது. வேய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல் அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.woman's hair is proud of Tamil says H.Raja

நம்முடலின் பாகங்களையும் மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே’ட்டி எனப்பட்டது. வேதத்தைக் கூட "மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம். கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் 'வே'கம் எனப்படுகிறது. உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது 'வே'டம். கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது 'வே'ம்பு. பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்’’என அவர் தெரிவித்துள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios