பெண்ணை மிரட்டி  தனியாக அழைத்து சென்று அண்ணன், தம்பி இருவரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். நண்பர்களும் கற்பழிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையைச் சேர்ந்தவர்  தீபக்  இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது காதலி  தாமரை. அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். 2 பேரும் நேற்று முன்தினம் இரவு பைக்கில் தஞ்சை  பைபாஸ் சாலை புதுஆற்றின் கரையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அண்ணன்-தம்பிகளான இளவரசன், கார்த்தி   ஆகியோர் பைக்கில் வந்தனர். ஆற்றின் கரையோரம் இளம்ஜோடி நின்றுகொண்டு இருப்பதை பார்த்து பைக்கை நிறுத்தி விட்டு அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்றனர். இரவு  நேரத்தில் இங்கு என்ன வேலை என்று கூறி 2 பேரம் சேர்ந்து முத்துவை  மிரட்டி அங்கிருந்து விரட்டி விட்டனர்.

காதலனும் அவர்களுக்கு பயந்து தனது காதலியை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்து ஓடியுள்ளான். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி  தனியாக அழைத்து சென்று அண்ணன், தம்பி இருவரும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.  பின்னர் இளவரசன் தனது நண்பர்களுக்கு செல்போனில்  தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து, ரவிச்சந்திரன், இளவரசன், செல்வம், நடராஜன் ஆகிய 4 பேர் வந்தனர். இதன்பின்னர் அந்த பெண்ணை 4 பேரும் சேர்ந்து  பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு துடித்தார்.

இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும் அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்தனர். இதனால் 6 பேரும் தப்பித்து ஓடி விட்டனர்.  அந்த பெண்ணை மீட்டு தஞ்சை தாலுகா போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு  வந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சகோதர்கள் இளவரசன், கார்த்தி  மற்றும் 4 நண்பர்கள் என 6 பேரையும் கைது செய்தனர்.