WITHOUT SMALL PAPER CAN YOU SPEAK 15 MIN MR.RAHUL? MODI CHALLENGING
கர்நாடக மாநிலத்தில், வரும் 12 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரசா பாஜகாவா என போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து உள்ளது
பாஜகவின் முதல்வர் வேட்பாளருக்கு ஆதராவாக, இன்று முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட கர்னாடக வந்துள்ளார் பிரதமர் மோடி
முதற்கட்டமாக கர்நாடக மாநில சந்தே மரகுஅல்லி என்ற இடத்தில் மோடி இன்று உரை நிகழ்த்தினார்
அப்போது, பாஜக செய்த சாதனைகளை பற்றியும், காங்கிரஸ் வெறும் பேச்சு மட்டும் தான்...செயலில் இல்லை என்றும் மோடி பேசினார்..
மேலும், கர்னாடக மாநிலத்தில் பாஜக சூறாவளி வீசுகிறது என்றும் தெரிவித்தார்
மேலும், இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் ஏப்ரல் 28 ஆம் தேதி எட்டப்பட்டது என மோடி பெருமிதமாக பேசினார்.இதனை மே தினமான இன்று மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் மக்கள் மத்தியில் பேசினார்.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பேசியது ஒன்றும் நிறைவேற்றப்பட வில்லை என்றும் கூறினார்
வாங்க பேசலாம் - மோடி சவால்
"கர்நாடாகாவில் காங்கிரஸ் செய்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து 15 நிமிடங்கள் பேப்பர் இல்லாமல் பேச தயாரா?" என்று ராகுல்காந்திக்கு மோடி சவால் விடுத்துள்ளார். "இந்தி, ஆங்கிலம் அல்லது தங்களது தாய் மொழியில் ராகுல் 15 நிமிடம் பேசலாம். ராகுல்காந்தி 15 நிமிடம் பேசினால் நான் ஓடிவிடுவேன் என அவர் கூறியிருந்தார். ராகுல் பேச மட்டும்தான் செய்வார், ஆனால் நாங்கள் வேலைக்காரர்கள்" என்றார்.

இதற்கு முன்னதாக 15 நிமிடம் நான் பேசினால்,மோடி என் முன் நிற்க கூட மாட்டார் என ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், துண்டுச்சீட்டை பார்த்து தான் மற்றவர்கள் பேசுகிறார்கள் என்பதை சவாலாக எடுத்துரைத்தார் மோடி..
மேலும் எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும், பிரதமாபர் மோடி மைக் முன் எதையும் பார்க்காமல் தான் பேசுவார். எதையும் மனப்பாடம் செய்தோ அல்லது பார்த்து படிக்கும் பழக்கமும் இல்லாதவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது
