- Home
- Tamil Nadu News
- டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய், ஏற்கெனவே சிபிஐ அலுவலகத்தில் கடந்த 12ம் தேதி ஆஜரானார். அவரிடம் காலை 11 மணி முதல் மாலை 3.45 மணி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்

சிபிஐ பிடியில் விஜய்
தவெக தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நாளை (ஜனவரி 19) 2வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார். இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். இன்று இரவு டெல்லியில் நட்சத்திர ஹோட்டலில் தங்கும் விஜய் நாளை காலை 11 மணிக்கு சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
விஜய்யிடம் கிடுக்குபிடி கேள்விகள்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய், ஏற்கெனவே சிபிஐ அலுவலகத்தில் கடந்த 12ம் தேதி ஆஜரானார். அவரிடம் காலை 11 மணி முதல் மாலை 3.45 மணி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது விஜய்யிடம் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டன. மக்கள் மயங்கி விழுந்தும் ஏன் பேச்சை நிறுத்தவில்லை? கரூர் கூட்டத்துக்கு என் தாமதமாக வந்தீர்கள்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
நாளை 2வது முறையாக விசாரணை
விசாரணை முடிந்த பிறகும் விஜய் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தனி அறையில் அமர வைக்கப்பட்டார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும், அவர் கூறிய பதிலையும் பிரிண்ட் செய்து கொண்ட சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். இந்த நிலையில் தான் நாளை 2வது நாளாக விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடைபெற உள்ளது.
என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்?
நாளைய விசாரணையில் விஜய்யிடம் முக்கியமான கேள்விகளை எழுப்ப சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தமிழக காவல்துறையிடம் தவெக சார்பில் வேறு இடம் கேட்கப்பட்டதா? நீங்கள் எந்த இடம் கேட்டீர்கள்? காவல்துறையின் அறிவுத்தல்களை தவெக நிர்வாகிகள் கேட்கவில்லையா? என்பது குறித்த முக்கியமான கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
நாளையும் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக விஜய்யிடம் விசாரணை நடைபெறலாம் என கூறப்படுகிறது. நாளையுடன் விஜய்யிடம் விசாரணை முடிந்து விடுமா? இல்லை மேலும் ஒருநாள் விசாரணை தொடருமா? என்பது இனிமேல் தான் தெரியவரும்.

