Asianet News TamilAsianet News Tamil

ஆட்சிக்கு வந்த 3 மாசத்துல ஏத்துனது 9 ரூபாய், குறைப்பது 3 ரூபாயா.?? திமுகவை பங்கம்செய்த ஓபிஎஸ்.

பெட்ரோலுக்கான விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்றும், டீசலுக்கான விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, நிதிநிலை அறிக்கையில் பெட்ரோலுக்கு மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது, 

with 3 month petrol price increased till 9 rupess, but you reduced just 3 rupees, Ops criticized dmk governmnet.
Author
Chennai, First Published Aug 14, 2021, 11:21 AM IST

விடியலை நோக்கி என்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி எரிவாயு சிலிண்டருக்கு ஆயிரம் ரூபாய் மானியம், மாதமொருமுறை மின்கட்டணம், முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக அதிகரிப்பு, கல்விக்  கடன் ரத்து, நகை கடன் ரத்து, மகளிருக்கு மாதம் 1000 ரூபாய், 60 வயதுக்கு மேற்பட்டோரின் உதவித்தொகை 1500 ரூபாய் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை விரக்தியை நோக்கி மக்களை அழைத்துச் சென்றிருக்கிறது.

மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-2022 ஆம் ஆண்டிற்கான புதிய நிதிநிலை அறிக்கையும், திமுகவின் தேர்தல் அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வாக்களித்த மக்களை திமுக வஞ்சித்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் நிதி நிலைமை முன்கூட்டியே நன்கு அறிந்திருந்தும், ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை மக்களிடமும் அளித்ததும், இந்த அறிக்கை மூலம் அம்பலப்பட்டு உள்ளது. 

with 3 month petrol price increased till 9 rupess, but you reduced just 3 rupees, Ops criticized dmk governmnet.

2021-2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை உடன் ஒப்பிடும்போது 2021 2022 ஆம் ஆண்டிற்கான புதிய நிதிநிலை அறிக்கையில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, நீதித் துறை, நிர்வாகம், நெடுஞ்சாலைகள் துறை, உயர்கல்வித் துறை, மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டம் மற்றும் குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் ஆகியவற்றிற்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

2021-2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உணவு மாநிலத்திற்கான ஒதுக்கீடு9,604.27  கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் திருத்திய நிதிநிலை அறிக்கையில் 8,437.57  கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 2021 மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 5.24 லட்சம் பேர் அதற்கு முன்பாக 1.72 லட்சம் பேர், ஆக மொத்தம் 7.17 லட்சம் பேர் புது குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்ததில் 4.52 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், 1166.70  கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு இருப்பது சில பயனாளிகளுக்கு பொருட்கள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி விடுமோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

with 3 month petrol price increased till 9 rupess, but you reduced just 3 rupees, Ops criticized dmk governmnet.

பெட்ரோலுக்கான விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்றும், டீசலுக்கான விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, நிதிநிலை அறிக்கையில் பெட்ரோலுக்கு மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது, திமுக அரசு 7-5-2021 அன்று ஆட்சி பொறுப்பேற்றபோது, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.17 ரூபாயும் டீசல் விலையை லிட்டருக்கு 86 ரூபாய் 65 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள சூழ்நிலையில், 13-8-2021 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது திமுக அரசு அமைந்த பிறகு பெட்ரோல் விலை 9 ரூபாய் 32 காசாகவும்,  டீசல் விலை 8 ரூபாய் 25 காசு ஆகவும் உயர்ந்துள்ளது. என்பதுகுறிப்பிடத்தக்கது. 

with 3 month petrol price increased till 9 rupess, but you reduced just 3 rupees, Ops criticized dmk governmnet.

இந்த நிலையில் பெற்றோருக்கு மட்டும் மூன்று ரூபாய் வரி குறைப்பு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் டீசலுக்கு விலை குறைப்பு பற்றி எதுவும் குறிப்பிடாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய நடுத்தர மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை, சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சாதனைகளே இல்லாத சோதனைகள் நிறைந்த வேதனையான நிதிநிலை அறிக்கை இது. என முன்னாள் நிதி அமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios