தமிழக சட்டமன்றதேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கை பதிவு செய்யலாம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றதேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கை பதிவு செய்யலாம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, சென்னையில் இரண்டாவது நாளாக இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். நேற்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் முதலில் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று இந்தியத் தோ்தல் ஆணையத்தின் பிரதான செயலாளா் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர், 2019ல் நடைபெற்ற தேர்தல் தொடர்பான தகவல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவி பேட் தொடர்பான தகவல்கள் அதில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, தலைமை தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
* தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதே இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை.
* கொரோனா காலகட்டத்தில் பீகார் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.
* கொரோனா தொற்று காலத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தேர்தல் நடத்துவது சவாலானது.
* 18 வயதான அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன் வர வேண்டும்
* அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம், கழிவறை மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
* அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று மரபுப்படி தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும்.
* தமிழக சட்டமன்றதேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு வசதி செய்து தரப்படும்.
* பணப்பட்டுவாடா, பரிசுப்பொருள் விநியோகம் போன்ற விதிமீறல்களை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்கும்.
* வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளன.
* நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
* தேர்தலின் போது ஏற்படக்கூடிய சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
* அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
* முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
* தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது பற்றி தற்போது எதுவும் கூற முடியாது.
* 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்.
* ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேருக்கு மேல் இல்லாதவாறு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
* பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது
* வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 22, 2020, 2:09 PM IST