கருணாநிதியை போல மஞ்சள் துண்டு போட்டுக்கொண்டு, முதல்வர் கனவு காண ஆரம்பித்து விட்டார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்.

 

திருநாவுக்கரசர் சமீபகாலமாக, மஞ்சள் துண்டு போட்டுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறார். அவரை பார்க்கிற கட்சிக்காரர்கள் 'என்ன தலைவரே, திடீர்னு மஞ்சள் துண்டுக்கு மாறிட்டேள்' எனக் கேட்டு வருகிறார்கள். அதற்கு 'கருணாநிதி, மஞ்சள் துண்டு போட்டுக் கொண்ட பிறகுதான் முதல்வர் ஆனார். நான் அணியக் கூடாதா? என சிரித்துக் கொண்டே கேட்கிறாராம்.

அதே நேரம், டெல்லிக்கு சென்றால் அங்கே இருக்கிற பா.ஜ.க., தலைவர்களை நேரில் பார்த்து, சிரிக்கச் சிரிக்க பேசுகிறார். சென்னையில் கால் வைத்ததும், பா.ஜ.க.,வை திட்டித் தீர்க்கிறார். 'இவரோட அரசியல் கணக்கையே புரிந்து கொள்ள முடியவில்லை என காங்கிரஸ் கட்சிக்காரர்கள் புலம்புகின்றனர்.