டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனிமனித இடைவெளி காற்றில் பறக்கிறது , ஆதார் எண்ணை குறித்து வைத்து ரசீது கொடுக்கவில்லை என தனது முந்தைய தீர்ப்பை மதிக்காததால் தமிழகம் முழுக்க இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 17ம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கறிஞர் ராஜேஷ்..'தனிமனித இடைவெளி ஆதார் அட்டை எண் குடை என நீதிமன்றம் சொன்ன எந்த நடைமுறைகளையும் டாஸ்மாக் கடைகள் பின்பற்றவில்லை என்று அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் இவர்.  மக்கள் நீதி மய்யம் சார்பில் மெளரியா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். இவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 17ம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.

 

 

 இதனை விமர்சித்துள்ள மக்கள் நீதிமய்யம தலைவர் கமல்ஹாசன், “குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்.' என்று ட்வீட் செய்துள்ளார். தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.