இல்லம் தேடி கல்வி திட்டம் தொடருமா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பரபரப்பு தகவல்..!

திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில்,  தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 

Will the illam thedi kalvi continue? Minister Anbil Mahesh information

திருச்சி மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து நிறைய நிதியை தமிழக முதல்வர் ஒதுக்கி உள்ளார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில்,  தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நவம்பர் 4ஆம் தேதி  திருச்சிக்கு வருகை தரும்  தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்தும் மற்றும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கு.. தீர்ப்புக்கு நாள் குறித்த நீதிமன்றம்..!

Will the illam thedi kalvi continue? Minister Anbil Mahesh information

கூட்டத்திற்கு பின் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்;- கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கூடத்தை எப்படி திறப்பது? எப்படி எல்லாம் பாடத்தை நடத்தி முடிப்பது என்று யோசித்தபோது  பள்ளிக்கூடத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திறங்கள். ஆனால், இரண்டு வருடம் குழந்தைகளுக்கு படிப்பு இடைவேளை விட்டு விடக்கூடாது என்று ஆலோசனை கூறி இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ஊக்கமளித்தார். இந்தியாவில் எந்த ஒரு அரசாங்கமும் இந்த திட்டம் போல் எண்ணி பார்க்கவில்லை.

1 லட்சத்து 76 ஆயிரம் மையம்  எங்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு தேவைப்பட்டது. 34 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு மையத்தில்  20 குழந்தைகள் என்கிற விதத்தில் இதை நாங்கள் திட்டமிட்டோம். இந்த திட்டம் செயல்படுத்தி நேற்றோடு ஒரு வருடம் ஆவதால் முன்னறிவிப்பு இல்லாமல் குன்னூரில் ஒரு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினேன். 20 பேருக்கு 1 தன்னார்வலர் பாடம் எடுத்து கொண்டு இருந்தார். அப்போது இந்த திட்டம் மிகப்பெரியதாகும் அளவில் வெற்றி பெற்றிருப்பதை நான் உணர்ந்தேன்.

Will the illam thedi kalvi continue? Minister Anbil Mahesh information

இல்லம் தேடி கல்வி திட்டம் தொடருமா என்கிற கேள்விக்கு? இன்னும் கொஞ்சம் காலம் இந்த திட்டம் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பது  தான் உண்மை. திருச்சி மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து நிறைய நிதியை தமிழக முதல்வர் ஒதுக்கி உள்ளார். குறிப்பாக 4ம் தேதி டிஎன்பிஎல் திறப்பு விழாவிற்கு வருகை தர உள்ளார். 

அக்டோபர் இரண்டாம் தேதி ஹீலியம் பலூன் வெடித்து விபத்தில் பள்ளி மாணவனுக்கு கற்கள் உடலில் பல்வேறு பகுதிகளில் பதிந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால் சிறு குடல் பாதிப்பு எடுத்துவிட்டு பெருங்குடல் வாயிலாக மட்டுமே பள்ளி மாணவன் நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக சிறுவனின் தாயாரிடம் பேசி ஆம்புலன்ஸ் வாயிலாக நானே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளேன். சென்னையில் சிகிச்சை மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் நானே செய்து தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  விடியலாட்சி தருவோம் சொன்ன முதல்வரே ஏண்டா விடியுது என புலம்பும் அளவுக்கு நிலைமை இருக்கு.. டிடிவி. விமர்சனம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios