முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பரவாத கொரோனா தொற்று வேல் யாத்திரையால் பரவுமா? என்று எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக பா.ஜ., சார்பில், நவம்பர், 6ல் துவங்கி, டிச., 6 வரை, திருத்தணி முதல் திருச்செந்துார் வரை, வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், யாத்திரைக்கு அனுமதி வழங்க, அரசு மறுத்து விட்டது.ஆனாலும், தடையை மீறி திருத்தணியில், 6ம் தேதி, வேல் யாத்திரை துவங்கப்பட்டது. 


இது குறித்து பாஜக மூத்த  தலைவர் எச்.ராஜா கூறுகையில், ‘’முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் பங்கேற்ற கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல்வர் கூட்டத்தில் பரவாத கொரோனா நோய் தொற்று வேல் யாத்திரை நடத்தினால் பரவி விடுமா? எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தே வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்தது’’ என அவர் கூறி உள்ளார்.