Asianet News TamilAsianet News Tamil

திமுகவுடன் இணைவாரா சசிகலா..? திமுக எம்.பி.யின் அதிரடி பதில்..!

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் சசிகலா இணைவாரா என்பது குறித்து திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
 

Will Sasikala join DMK ..? DMK MP's response ..!
Author
Trichy, First Published Feb 4, 2021, 9:19 PM IST

திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்தான் இறுதியாக எடுப்பார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு பேரறிவாளன் உள்பட 7 பேருக்கும் முழுமையான விடுதலைக்கான தீர்வு கிடைக்கும்” என்று ஆர்.எஸ். பாரதி கூறினார்.Will Sasikala join DMK ..? DMK MP's response ..!
அவரிடம் சட்டப்பேரவைத் தேர்தலில் சசிகலாவும் திமுகவும் இணைய வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, “டிடிவி தினகரன் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எக்காரணத்தைக் கொண்டும் திமுகவை மட்டும் வெற்றிபெற விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள் என்று அறிக்கையில் சொல்லியிருக்கிறார். அப்படி இருக்கும்போது சசிகலா எப்படி எங்களோடு இணைவார்?” என்று பதிலளித்தார்.Will Sasikala join DMK ..? DMK MP's response ..!

மேலும் அவர் கூறுகையில், “திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து தலைவர் மு.க. ஸ்டாலின்தான் முடிவுசெய்ய வேண்டும். அதிமுக அரசின் அதிகாரம் இன்னும் இருபது நாட்கள்தான். அதன்பிறகு, அவர்களால் எதையும் செய்ய முடியாது. எனவே வருகிற பிப்ரவரி 28ம் தேதி, தேர்தல் ஆணையம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த அறிவிப்பு வரும் வரைதான் அவர்களுடைய அதிகாரமும் இருக்கும்” என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios