Asianet News TamilAsianet News Tamil

ப. சிதம்பரத்தின் சிறைவாசம் முடியுமா...? ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

டெல்லி உயர் நீதிமன்றம் அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. கடந்த வாரம் விசாரணை முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 

Will P.Chidambaram release from prison?
Author
Delhi, First Published Dec 4, 2019, 6:52 AM IST

நூறு நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா என்பது இன்று தெரியவர உள்ளது.Will P.Chidambaram release from prison?
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்டு 21 அன்று கைது செய்தது. பின்னர் இதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்தது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அக்டோபர் 22 அன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால், அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டதால் தொடர்ந்து சிறையில் இருந்தார். அந்த வழக்கிலும் ஜாமீன் பெற ப. சிதம்பரம் முயற்சி செய்து வந்தார். ஆனால். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.Will P.Chidambaram release from prison?
டெல்லி உயர் நீதிமன்றம் அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. கடந்த வாரம் விசாரணை முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. Will P.Chidambaram release from prison?
இன்று காலை இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட உள்ளது. இதனையடுத்து ப.சிதம்பரத்துக்கு அமலாக்கப்பிரிவு வழக்கில் ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும். இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தால், 100 நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம் முடிவுக்கு வரும். ப. சிதம்பரம் வெளியே வருவது உச்ச நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios