திருவாரூர் இடைத்தேர்தலில் வென்றே தீர்வது என பரபரத்து வருகிறார் டி.டி.வி.தினகரன். ஆர்.கே.நகர் ஃபார்முலாவை திருவாரூரில் பின்பற்றாமல் மாற்று யுக்திகளை அவர் கையாள உள்ளதாகக் கூறப்படும் நிலையில், தனி ரூட்டை வைத்திருப்பதாக கூறுகிறார் டி.டி.வி.தினகரன். 

திருவாரூர் வேட்பாளராக எஸ்.காமராஜை அறிவித்துள்ள டி.டி.வி.தினகரன் தேர்தல் பணிகளில்ல் சுழன்று வருகிறார். இந்நிலையில், தஞ்சையில் அமமுக கட்சி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது, ’’திருவாரூர் இடைத்தேர்தலில் சப்ளித்தனம் செய்யமாட்டோம். தனி பார்முலா வைத்துள்ளேன்.

அதன் மூலம் பணம்கொடுப்பவர்களை முக்காடிட்டு ஓடசெய்வோம். ஆர்.கே.நகரில் அதிமுக தான் பணப்பட்டுவாடாவில் ஈடுப்பட்டது. திமுக பணப்பட்டுவாடாவில் ஈடுப்படவில்லை என்று அரசியலுக்காக திமுகவினர் வேண்டுமானால் பொய்சொல்வார்கள். நான் சப்ளித்தனம் செய்யமாட்டேன், திருவாரூர் இடைத்தேர்தலில் பணப்படுவாடாவை தேர்தலை ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டும்.

ஆனால் 303 வாக்குசாவடிகளிலும் தனி பார்முலா வைத்து உள்ளேன். பணம்கொடுப்பவர்கள் அதிகாரிகளிடம் மாட்டிகொள்வார்கள். முக்காடுபோட்டுக் கொண்டு ஓடவைப்போம்’’ என தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டபோது டி.டி.வி.தினகரன், 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றதாக பரவான பேச்சு உண்டு. அந்த விவகாரம் இன்னும் நீடிக்கிறது. இந்த நிலையில் அவர் சப்ளித்தனம் செய்ய மாட்டேன் என கூறியிருப்பது அரசியல் நோக்கர்களை கவனிக்க வைத்துள்ளது.