மாறாகத் தேர்தல் முடிவுகள் வந்தாலோ,  9 தொகுதிகளுக்கும் குறைவாக அதிமுக வென்றாலோ, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சரிக்கட்ட வேண்டிய நிலை வரும். ஒருவேளை அதிமுக 4 தொகுதிகளுக்கும் குறைவாக வெற்றி பெற்றால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சரிகட்டினால்கூட, எதிர்க்கட்சிகள் சம நிலையில் இருக்கும். 

எஞ்சிய இரண்டு ஆண்டு கால அதிமுக ஆட்சியின் ஆயுள் காலத்தைத் தீர்மானிக்கும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளின் முடிவுகள் இன்று எண்ணப்பட உள்ளன. தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக ஆட்சி சிக்கலின்றி தொடருமா இல்லையா என்பது தெரியவரும்.


தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டது. இந்தத் தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் மொத்த பலம் 234. ஆனால், தற்போது அவையின் பலம் 212 மட்டுமே. அதிமுகவுக்கு 114 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆனால், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்ற மூன்று உறுப்பினர்கள், சபாநாயகரையும் சேர்த்துதான் 114 உறுப்பினர்கள் அதிமுகவுக்கு உள்ளனர்.