சென்னையில் இருந்து  குமரிக்கு விடுமுறைக்கு வந்த காவலர் மனைவி மற்றும் உறவினர்கள் மன அழுத்தம் கொடுப்பதாக 22 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு ஊராட்சி சிதறாமல் பின்னமூட்டுவிளை பர்னபாஸ் மகன் ஜினிகுமார். இவர் தமிழக காவல்துறை சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் 29தேதி குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்த  ஷெலின் ஷீபா வுக்கும் திருமணம் நடந்தது. திருமணம்மான சிறிது நாட்களில் இவர் மாமனார் வீட்டில் விருந்திற்கு சென்றபோதே தாயாரின் சொல்கேட்டு நடந்து வந்ததால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில் இவர்களுக்கு ஷிஷன்சிங் 9, ஷைஷா 6 என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் சென்னையில் இருந்து கடந்த ஆறாம் தேதி நட்டாலத்தில் உள்ள மனைவி பிள்ளைகளை பார்க்க சென்றுள்ளார். அப்போது மனைவி மற்றும் மைத்துனர், மாமியார் லலிதா ஆகியோர் சேர்ந்து நட்டாலம் ,வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள சொத்துகளை மனைவி பெயரில் எழுத கட்டாயபடுத்தி தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் வந்து ஜினிகுமார் தந்தையிடம் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். இரவு தூங்க சென்ற பின் காலையில் மகன் ஜினிகுமாரை பெற்றோர்கள் தேடியபோது அவரை காணவில்லை. மகனின் அறையில் சென்று பார்த்தபோது 22பக்க கடிதம்  இருந்தது. அந்த கடிதத்தில் அவரது இளமை காலத்தில் தாய் தந்தை பட்ட வறுமை மற்றும் கஷ்டத்திலும் தன்னையும், சகோதரிகளையும் பராமரித்து வளர்ததையும், தந்தையுடன் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றதையும் கஸ்டமான காலத்திலும் தன்னை கல்லூரியில் படிக்க வைத்து தனக்கு பிடித்தமான காவல்துறை வேலை கிடைக்க செய்த சம்பவங்களையும், இரண்டு சகோதரிகளை திருமணம் செய்து கொடுக்க தகப்பனார் பட்ட கஷ்டங்களையுப் நெகிழ்ச்சியுடன் அந்த கடிதத்தில்  ஜினிகுமார் பதிவு செய்துள்ளார். 

அவர் மாமனார் வீட்டில் விருந்திற்கு சென்றபோது மாமனார், மைத்துனர் ஆகியோர் சேர்ந்து குடித்துவிட்டு பக்கத்து வீட்டில் தகராறு செய்ததையும், எந்த கெட்ட பழக்கம் இல்லாத தான் அந்த நிகழ்வில் இருந்து மனம் வருந்தியதையும், தொடர்ந்து தந்தை மற்றும் நான் சம்பாதித்த பணத்தில் நட்டாலத்தில் வாங்கிய நிலத்தை தன் பெயரில் வாங்க மனைவி கட்டாயபடுத்தி பலமுறை தகராறு செய்து தொடர்ந்து தாய்வீட்டிலேயே தங்கியிர்ப்பதாகவும். அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். புற்றுநோயால் அவதிப்பட்ட தாய்க்கு உதவுவதைகூட தட் மனைவி தடுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம்  தேதி நட்டாலத்தில் உள்ள மனைவி பிள்ளைகளை பார்க்க சென்றுபோது அப்போது மனைவி மற்றும் மைத்துனர், மாமியார் லலிதா ஆகியோர் சேர்ந்து நட்டாலம் ,வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள சொத்துகளை மனைவி பெயரில் எழுத கட்டாயபடுத்தி தாக்கி செருப்பால் அடித்து அவமான படுத்தியதால் தான் வாழ்கையை முடித்து கொள்ளபோவதாகவும் தந்தைக்கு 22பிபக்கத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஜினிகுமார் மாயமாகி உள்ளார். 

தனது சொத்துக்கள் தந்தைக்கு சேர வேண்டும் என  தனது கடிதத்தில் ஜினிகுமார் உருக்கமாக கேட்டுகொண்டு மாயமாகி உள்ளார். அவரது செல்போன் சுவிச் ஆப்செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அருமனை காவல் நிலையத்தில் காவலர் ஜினிகுமாரின் தந்தை புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.