Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டை தமிழகம் என அழைத்தது ஏன்..?ஆளுநர் ஆ,ர்.என். ரவி திடீர் விளக்கம்

எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

Why was Tamil Nadu called  Tamilagam Governor Ravi sudden explanation
Author
First Published Jan 18, 2023, 12:28 PM IST

தமிழ்நாடா.? தமிழகமா.?

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பது தான் சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருத்னர். இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி - தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

நான் ராஜினாமா செய்த அடியாள்.! நீ டிஸ்மிஸ் செய்யப்பட்ட பைத்தியம்.! டுவிட்டரில் மோதிக்கொள்ளும் சூர்யா-காயத்ரி

Why was Tamil Nadu called  Tamilagam Governor Ravi sudden explanation

தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது

அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்."எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

கோபாலபுரத்தை மகிழ்விப்பதை விட்டு விட்டு அறநிலையத் துறை ஊழியர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும்- அண்ணாமலை அட்வைஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios