Asianet News TamilAsianet News Tamil

கோபாலபுரத்தை மகிழ்விப்பதை விட்டு விட்டு கோயில் ஊழியர்களின் உயிரை காப்பாற்றுங்க- சேகர்பாபுக்கு அண்ணாமலை அட்வைஸ்

கோவில் வளாகத்துக்குள்ளேயே ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கும் நிலையில் தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு எத்தனை மோசமாகச் சீர்குலைந்து கிடப்பதற்கு சாட்சியாக இருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Annamalai has condemned the murder of a temple worker in Nellai
Author
First Published Jan 18, 2023, 12:23 PM IST

கோயில் ஊழியர் கொலை

நெல்லையில் கோயில் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நெல்லை மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை கோவில் ஊழியர் திரு கிருஷ்ணன், கோவில் சுற்றுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், கோவில் வளாகத்துக்குள்ளேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

 

சட்டம் ஒழுங்கு மோசம்

தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு எத்தனை மோசமாகச் சீர்குலைந்து கிடக்கிறது என்பது ஒரு புறம். கோவில்களில் நடைபெறும் முறைகேடுகளையும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை, கோவில் உண்டியல் பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்து,கோவில்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றை கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. 

Annamalai has condemned the murder of a temple worker in Nellai

கோபாலபுரத்தை மகிழ்வித்தது போதும்

தமிழகம் முழுவதும், சாராயக் கடைகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்வது, இளைஞர்கள் இது போன்ற குற்றச் செயல்களை புரிய காரணமாக அமைந்திருக்கிறது. இனியும் கோபாலபுர குடும்பத்தை மகிழ்விப்பது மட்டுமே தனது பணி என்றிருக்காமல், உடனடியாக அமைச்சர் திரு சேகர்பாபு கோவில் ஊழியர்களுக்கும், உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும்,

Annamalai has condemned the murder of a temple worker in Nellai

இழப்பீடு வழங்குக..

உயிரிழந்த கோவில் ஊழியர் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர்  உடனடியாகத் தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், அவரது இரு மகன்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், தமிழக பாஜக  சார்பில் வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

நான் ராஜினாமா செய்த அடியாள்.! நீ டிஸ்மிஸ் செய்யப்பட்ட பைத்தியம்.! டுவிட்டரில் மோதிக்கொள்ளும் சூர்யா-காயத்ரி

Follow Us:
Download App:
  • android
  • ios