Asianet News TamilAsianet News Tamil

நான் ராஜினாமா செய்த அடியாள்.! நீ டிஸ்மிஸ் செய்யப்பட்ட பைத்தியம்.! டுவிட்டரில் மோதிக்கொள்ளும் சூர்யா-காயத்ரி

இடைத்தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட தயாரா என அண்ணாமலைக்கு காயதிரி ரகுராம் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்க்கு பதில் அளித்த சூர்யா சிவாவை அண்ணாமலை உருவாக்கிய அடியாள் என காயத்திரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.

Clashes between BJP ex executives on social media have created a sensation
Author
First Published Jan 18, 2023, 11:51 AM IST

பாஜக உட்கட்சி மோதல்

தமிழக பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக நடிகை காயத்திரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து டாக்டர் டெய்சியை கொலை செய்து விடுவதாக மிரட்டிய சூர்யா சிவா எழுந்த புகாரால் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சிக்ககும் வகையில் நடிகை காயத்திரி ரகுராம் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்தநிலையில்,  ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? என காயத்திரி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்..! அறிவியல் தேர்வையும், கணித தேர்வையும் ஒன்றாக எழுத முடியுமா.? முரசொலி கடும் விமர்சனம்

 

இடைத்தேர்தலில் போட்டியிட தயாரா.?

இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் பாஜகவில் இருந்து விலகிய சூர்யா சிவா பதில் கருத்து அளித்துள்ளார் அதில், நீ கூப்பிடுற இடத்துக்கெல்லாம் வரத்துக்கு அவரை என்னன்னு நினைச்சீங்க? தைரியம் இருந்தால் உதயநிதியை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு இல்லை என்றால் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் முருகனை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு என பதில் அளித்திருந்தார். 

 

அடியாள் சூர்யா சிவா

இது தொடர்பாக காயத்ரி ரகுராம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அண்ணாமலைக்கு இப்போது என்னுடன் பேசத் தைரியம் இல்லை, ராஜினாமா செய்த அடி ஆளை அனுப்புகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு எதிராக அவர் போட்டியிட முடியுமா அல்லது முடியாதா என்று கேளு. இது ஆம் அல்லது இல்லை என்ற கேள்வி. விவாதிக்க எதுவும் இல்லை. இது காரியகர்த்தாவை சீர்ப்படுத்துதல் என்று அழைக்கப்படுகிறது. இப்படித்தான் அண்ணாமலை தேசிய அரசியல் கட்சியில் காரியகர்த்தாவை கட்சிக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கு பதிலாக தனது சுயநலத்திற்காக ஒரு காரியகர்த்தாவை அடி ஆளாக மாறுகிறார். வார்ரூம் ஜோக்கர்கள், கேசவவிநாயகம் ஜி மற்றும் அமைச்சர் எல்.முருகன் ஜியை தாக்க அண்ணாமலை கொடுத்த அடி ஆளு வேலையை முதலில் செய்யுங்க என ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

 

நேரில் சந்திக்க தைரியம் இருக்கா.?

இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டர் பதிவிட்ட சூர்யா சிவா,நான் ராஜினாமா செய்த அடியாள் என்றால் நீ டிஸ்மிஸ் செய்யப்பட்ட பைத்தியம். நீ போய் நிற்கிற இடத்தில் எல்லாம் அவரும் வந்து நிற்பாரா? நீ தான் என் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா என்னை நேரில் சந்திக்க யாருக்கு தைரியம் இருக்கிறது என்று ஒரு பேட்டியில் கேட்ட? எனக்கு இருக்கிறது தங்களுக்கு? என கேள்வி எழுப்பியுள்ளார். 


பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகளான சூர்யா சிவா, காயத்ரி ரகுராம் இடையே ஏற்பட்டுள்ள மோதல் சமூகவலை தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

வீரவணக்க நாள் கூட்டம்..! அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு திடீர் உத்தரவிட்ட எடப்பாடி

 

Follow Us:
Download App:
  • android
  • ios