நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம், அதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், சினிமாவில் நடிப்பதுபோல நிஜ வாழ்க்கையிலும் நடிக்கக் கூடாது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நடிகர்கள் அரசியல் பேசுகிறார்கள். அதைச் சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளது.
நடிகர் ரஜினியின் நடிப்பு, அவரது யதார்த்தமான பேச்சுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்துள்ளது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரஜினிக்கு மத்திய அரசு விருது வழங்குவதாக அறிவித்திருப்பதை அவர் வெகுவாகப் பாராட்டினார். “ நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க உள்ளது மிகவும் பொருத்தமானது. அவருடைய நடிப்பு, அவரது யதார்த்தமான பேச்சுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. மத்திய அரசு காலம் தாழ்த்தி இந்த விருதை வழங்கினாலும் பொருத்தமான நபருக்கு வழங்கியுள்ளது. இந்த விருதை வழங்குவதில் அரசியலுக்கு தொடர்பில்லை.