*சிக்கிம் முதல்வர் தமாங்கை விட சசிகலாவுக்கு தண்டனைக் காலத்தை குறைக்க நிறையவே பாயின்ட்கள் உள்ளன. மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு மனசு வைத்தால் இப்போதே சசிகலா விடுதலையாக அல்லது சிறையில் இருந்தபடியே தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளன. செய்தி

*பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் ஆகியோரின் மாமல்லபுர சந்திப்பின் போது இரு தேச எல்லைப் பிரச்னை, காஷ்மீர் விவகாரம், ஏற்றுமதி, வியாபாரம், தீவிரவாதற்கு எதிரான போர், பாங்க் ஆஃப் சீனாவை இந்தியாவில் நிறுவுதல் போன்ற பல விஷயங்கள் பேசப்படவுள்ளது. ஒட்டுமொத்த தேசம் மட்டுமின்றி தமிழகத்தின் பிரத்யேக வளர்ச்சிக்கும் இது உதவும்.- பா.ஜ.க. தரப்பு 

*கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், கொங்கு கட்சிக்கும் தேர்தல் நிதி வழங்கிய விவகாரத்தில் எந்த வகையில் தி.மு.க.வுக்கு சிக்கல் உருவாக்கிட முடியும்? என்று டெல்லியில் ஒரு தரப்பு ஆலோசனை நடத்துகிறது. கொளத்தூரில் துவங்கி ஹைதராபாத், லண்டன் என்று ஸ்டாலினின் தொடர்புகளை தேசிய உள்துறை அமைச்சகம் அலச துவங்கியுள்ளது.-செய்தி 

*கூட்ட நெரிசலில் நெருக்கிக் கொண்டு  தலைவருக்காக நிற்பது, முதல் வரிசையில் முண்டியடித்துக் கொண்டு அமர்வது என்பதெல்லாம் எனக்குப் பிடிக்காது. நான் மோடியின் ரசிகன் தானே தவிர, தீவிர அரசியல்வாதி கிடையாது. 
-கஸ்தூரி ராஜா (சினிமா இயக்குநர்)

*புதுச்சேரியில் அ.தி.மு.க.வின் கட்டுப்பாடில்தான் என்.ஆர்.காங்கிரஸ் இருக்கிறது. ஜெயலலிதாவால் மாநில செயலாளராக அறிவிக்கப்பட்ட புருஷோத்தமனை புதுச்சேரியில் அ.தி.மு.க.வினர் மதிக்கிறார்களா? இல்லை, அவரை கட்சி அலுவலகத்தினுள் அனுமதிக்காமல் இருக்கின்றனர். செய்தி.

*தலித் மக்கள்! என்று சொல்வதே தவறு. இந்த மக்களை ஆதி திராவிடன் என்று சொல்வது வரலாற்றுப் பிழை. அரிஜன் என்பது காந்திய மொழி. தாழ்த்தப்பட்டவன் என்பது தன்மான இழப்பு. தலித் என்பது தமிழ் இன அழிப்பு. எனவே ‘பழந்தமிழன்! ஆதித்தமிழன்’ என்று சொல்வதே சிறப்பு.
-வியனரசு (தமிழர் விடுதலைக் கொற்றம் தலைவர்)

*நயன்தாரா முன்பு போல் ஷூட்டிங்குகளில் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து யாரோடும் பேசுவதில்லை. தனது ஷாட் முடிந்ததும் பவுன்சர் பாய்ஸ் புடைசூழ கேரவேனுக்குள் போய் அமர்ந்து கொள்கிறார். சக ஆர்ட்டிஸ்டுகளை கண்டால் ஸ்மைல் செய்வது கூட இல்லை.-செய்தி

 

*மக்களவைத் தேர்தலுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வோம்! என்கிறார் மு.க.ஸ்டாலின். மீண்டும் பொய், மீண்டும் பித்தலாட்டம். மீண்டும் ஏமாற்று வேலை. அவரது பழக்க தோஷம் மாறாதல்லவா!-டாக்டர்.ராமதாஸ் (பா.ம.க.நிறுவனர்)

*பிரதமர் தமிழகம் வந்தபோது, அவரை வரவேற்க தி.மு.க. எம்.பி.க்கள் வரவில்லை. இது சர்ச்சையானது ஆனால் தவறு இதில் தி.மு.க. மீது இல்லையாம். காரணம், பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பிதழ் போகவுமில்லையாம், போன்கால்ஸ் வரவும் இல்லையாம். இதில் மனம் வெம்பி, பிரதமருக்கே புகார் அனுப்பிவிட்டனராம் ‘எங்களை ஏன் வெறுக்குறீங்க?’என்று.-செய்தி