Asianet News TamilAsianet News Tamil

வேலூரில் கமல் கட்சி போட்டியிடாததற்கு இதுதான் காரணமாம்... அமைச்சர் ஜெயக்குமார் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன்!

“மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து கூறுவதற்கு ஜனநாயக ரீதியில் எல்லா உரிமையும் உள்ளது. அதை  தவறு என்று சொல்ல முடியாது.” என்று தெரிவித்தார் ஜெயக்குமார்.
 

why MNM didn't contest in Vellore election ?
Author
Chennai, First Published Jul 20, 2019, 8:16 AM IST

நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேலூர் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.why MNM didn't contest in Vellore election ?
சென்னை ராயபுரம் தொகுதியில் பள்ளி மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், 200 மாணவவிகளுக்கு இலவச லேப்டாப்களை வழங்கினார். பின்னர் அங்கே செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது, வேலூர் தொகுதியில் போட்டியிடாத கமலை கிண்டல் செய்து பேட்டி அளித்தார். why MNM didn't contest in Vellore election ?
 தேசிய கல்வி கொள்கை  குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துகள் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து கூறுவதற்கு ஜனநாயக ரீதியில் எல்லா உரிமையும் உள்ளது. அதை  தவறு என்று சொல்ல முடியாது.” என்று தெரிவித்தார்.

 why MNM didn't contest in Vellore election ?
பின்னர், வேலூர் தொகுதியில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், “தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுவரும் ‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடிகர் கமல் பிஸியாக இருக்கிறார். அதனால், அவரால் 100 நாட்களுக்கு வெளியே வர முடியாது. அதனால்தான், வேலுார் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிடவில்லை” என்று ஜெயக்குமார் கிண்டலாகத் தெரிவித்தார்.

why MNM didn't contest in Vellore election ?
மேலும் ஜெயக்குமார் கூறுகையில், “மொழியை வைத்து வியாபாரம் செய்பவர்கள் திமுகவினர். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் செயல்படும் அதிமுக இந்தியை எந்த வகையிலும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். இந்தக் கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். திமுகவை போல டெல்லிக்கு பாத பூஜைகள் எல்லாம் செய்து பதவிகளை நாங்கள் பெறவில்லை.” என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios