தனக்கு மட்டுமே இப்படி நடப்பதாகவும், இன்னும் எத்தனை முறை பொறுத்துக் கொள்வது என்று நடிகை குஷ்பு புலம்பித்தவிக்கிறார்.

ட்விட்டரில் பிரபலங்கள் பலர் அறிமுகம் ஆவதற்கு முன்பே பிரபலமாக இருந்து வருபவர் குஷ்பு. ட்விட்டரில் மட்டும் குஷ்புவை சுமார் 13 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். காங்கிரசில் இருக்கும் போதும் சரி தற்போது பாஜகவில் இருக்கும் போதும் சரி, ட்விட்டரை சரியாக பயன்படுத்தி தன்னை லைம் லைட்டிலேயே வைத்திருப்பவர் குஷ்பு. சொல்லப்போனால் களத்தில் செய்யும் அரசியலை விட ட்விட்டரில் குஷ்பு செய்யும் அரசியல் வெகு பிரபலம். மாற்றுக்கட்சியினருடன் சண்டை, ஆபாச ட்வீட்டுகளுக்கு பதிலடி என குஷ்புவின் ட்வீட்டுகளுக்கு என்று ரசிகர் கூட்டமும் உண்டு.

இதற்கிடையே நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கை வெரிபைடு செய்து ப்ளு டிக் வழங்கியிருந்தது ட்விட்டர் நிறுவனம். ஆனால் குஷ்பு காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த சில நாட்களில் அந்த ப்ளு டிக்கை வாபஸ் பெற்றது ட்விட்டர் நிறுவனம். இதனால் அதிர்ச்சி அடைந்த குஷ்பு, தனக்கு வெரிபைடு புரபைல் வேண்டும் என்றும் என்ன காரணத்திற்காக ப்ளு டிக் அகற்றப்பட்டது என்றும் ட்விட்டர் நிறுவனத்திடம் சண்டையில் ஈடுபட்டார். இதன் பிறகு மறுபடியும் குஷ்புவிற்கு ப்ளு டிக் வழங்கப்பட்டத. இந்த நிலயில் மீண்டும் குஷ்புவின் பெயருக்கு பக்கத்தில் இருந்து ப்ளு டிக்கை டிவிட்டர் நிறுவனம் மறுபடியும் அகற்றியது.

இதனால் டென்சன் ஆன குஷ்பு, இதோடு மூன்றாவது தடவையாக எனது ப்ளு டிக் மாயமாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் எதற்காக எனது வெரிபைடு அக்கவுண்டில் இருந்து ப்ளு டிக்கை அகற்றுகிறது என்றே தெரியவில்லை. இது மிகவும் கடினமாக உள்ளது. தயவு செய்து மறுபடியும் எனக்கு ப்ளு டிக்கை ட்விட்டர் தர வேண்டும் என்று ட்விட்டரிலயே பதிவிட்டிருந்தார் குஷ்பு. ஆனால் எதுவும் நடக்காத நிலையில், மறுபடியும் இன்னும் எனக்கு ப்ளு டிக் வரவில்லை. மிக வேகமாக இந்த பிரச்சனையை தீர்த்து எனக்கு ப்ளு டிக்கை தந்து உதவ வேண்டும் என்று மறுபடியும் ஒரு ட்வீட் செய்தார் குஷ்பு.

கிட்டத்தட்ட குஷ்பு புலம்பித் தீர்த்துள்ளார் என்றே சொல்லலாம். ஒரு கட்டத்தில் ட்விட்டர் நிறுவனர் மறுபடியும் குஷ்புவின் அக்கவுண்டிற்கு ப்ளு டிக்கை கொடுத்தது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள குஷ்பு, தனக்கு ப்ளு டிக் கிடைத்துவிட்டதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.