Asianet News TamilAsianet News Tamil

டெண்டர்களில் ஆர்வம் காட்டும் எடப்பாடி அரசு எய்ம்ஸில் ஏன் காட்டவில்லை..? அதிரடியாக கேட்கிறார் டிடிவி தினகரன்..!

மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 

Why is the government not showing interest in  AIIMS? TTV Dinakaran asks..!
Author
Chennai, First Published Dec 17, 2020, 9:51 PM IST

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், மருத்துவமனை அமையும் அந்த இடத்தை தமிழக அரசு முறைப்படி மத்திய அரசிடம் ஒப்படைக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தை விமர்சித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை பழனிசாமி அரசு முறைப்படி மத்திய அரசிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.Why is the government not showing interest in  AIIMS? TTV Dinakaran asks..!
மருத்துவமனை அமைக்கும் பணிகளுக்கான டெண்டரில் மாநில அரசு முடிவெடுக்க விதிகள் அனுமதிக்காது என்பதால், டெண்டர்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் ஆட்சியாளர்கள் இதில் அக்கறை காட்டவில்லையோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்திருக்கிறது.‘பதவியைவிட கொடுத்த வாக்குறுதியே முக்கியம்’, ‘முதலமைச்சரைப் பார்த்து கொரோனாவுக்கே பயம்’ என்றெல்லாம் உலக மகா நடிகர்களைப் போல வாய்கூசாமல் வசனம் பேசும் அமைச்சர்கள் மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்திலும் கூட நம்பிக்கைத்துரோகம் செய்ய துணிவது சரியா? இதன்பிறகாவது, மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று பதிவில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios