அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய சம்மதித்து விட்டாலும் சில டீல்கள் முடியாமல் இருப்பதே இழுபறிக்கு காரணம் எனத் தகவல்கள் கசிந்துள்ளது. 

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி நிறைவு பெற்று விட்டதால் தேமுதிகவுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் தற்போதைக்கு அதிமுக கூட்டணி மட்டுமே. பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல், காங்கிரஸ் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் என பலரும் விஜயகாந்தை சந்தித்தாலும் பாஜக உடனான நெருக்கத்தால் அதிமுக கூட்டணியை ஏற்கெனவே டிக் அடித்து விட்டது தேமுதிக. 

ஆரம்பத்தில் பாமகவை விட கூடுதலாக தொகுதிகளை கேட்டு முரண்டு பிடித்த தேமுதிக தற்போது 5 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா சீட்டை பெற்றுக் கொள்ள முன் வந்துள்ளது. அத்தோடு மத்திய அமைச்சர் பதவி தருவதாக பாஜக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் ஒரு பெரும் தொகை கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட்டணியை உறுதி செய்யாமல் இருக்கிறது தேமுதிக. 

இதனையடுத்து சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட அதிமுக நிர்வாகிகள் நேற்று திடீரென சென்று சந்தித்தனர். விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதாவும் பங்கேற்றார். இந்த சந்திப்பு அரைமணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்போது தேர்தல் நெருங்கி வருவதால், கூட்டணியை நிறைவு செய்து விட்டு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். ஆகையால் உடன்பாட்டை ஏற்படுத்தி கொள்ளுங்கள் என ஓ.பிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

உடனே குறிக்கிட்ட பிரேமலதா, கூட்டணிக்கு நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். நீங்கள் கொடுக்க ஒப்புக் கொண்ட தொகையை உடன்பாட்டில் கையெழுத்திடும் முன்பே கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்க ஒப்புக்கொண்ட தொகையை ரொக்கமாக கொடுக்க வேண்டாம். அந்த மதீப்பீட்டுக்கு இணையாக தங்கமாக கொடுத்து விடுங்கள்’’ எனக் கேட்டு ஓ.பி.எஸை அதிர வைத்திருக்கிறார். இப்போதைக்கு அப்படி கொடுக்க சாத்தியம் இல்லை. என ஓபிஎஸ் சமாளிக்கவே, உங்களால் முடியாததா? நீங்கள் நினைத்தால் முடியும். அதனை செய்யுங்கள் கூட்டணி உடன்பாட்டிற்கு அடுத்த சில மணி நேரங்களில் வருகிறோம்’ என பிரேமலதா கறாராக கூறினாராம். உடனே பதிலளிக்க முடியாத ஓ.பி.எஸ் மற்றவர்களிடம் ஆலோசித்து விட்டு தெரிவிக்கிறோம்’’ எனக்கூறி விட்டு திரும்பி இருக்கிறார். 

இன்று வரை பிரேமலதா கேட்டவழியில் அந்தப்பலன்கள் சென்று சேரவில்லை. இதனால் தான் கூட்டணியை இன்று அறிவிப்பதாக தெரிவித்து இருந்த தேமுதிக நாளை அறிவிப்பதாக பின் வாங்கி வருகிறது. நாளை மோடி சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்குள் பிரேமலதா வைத்த டிமாண்டுகள் செயல்படுத்தப்பட்டு கூட்டணி நிறைவு பெரும் என தேமுதிகவும் அதிமுகவும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன.   இந்நிலையில், கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி உள்ளது.