Asianet News TamilAsianet News Tamil

Jai bhim :திரெளபதி, ருத்ர தாண்டவத்தில் இழிவாக பேசும்போது வாயை திறக்கலையே ஏன்..? அன்புமணிக்கு விசிக கேள்வி..!

குருமூர்த்தி என்பது காடுவெட்டி குருவை குறிக்குமாம்! காடுவெட்டி எனும் அடைமொழியோடுதான் அவர் அறியப்பட்டார். அவர் பெயரை வம்பாக இழுப்பது அவருக்கு கெளரவம் சேர்ப்பதாகாது

Why do you keep your mouth open when you speak disparagingly of us ..? Big question for Anbumani ..!
Author
Tamil Nadu, First Published Nov 11, 2021, 1:23 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஜெய் பீம் திரைப்படம் குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவை சாதிவெறியர் என பூசுகிறார் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Why do you keep your mouth open when you speak disparagingly of us ..? Big question for Anbumani ..!

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை; ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறி இருந்தார். இது தொடர்பாக 9 வினாக்களை எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதி அந்த வினாக்கள் அனைத்துக்கும் விடையளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். Why do you keep your mouth open when you speak disparagingly of us ..? Big question for Anbumani ..!

‘ஜெய்பீம்’ திரைப்படம் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு பல ஐயங்கள் உள்ளன. இராஜாக்கண்ணுவை படுகொலை செய்த காவல் அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி என்பதை அறிந்திருந்தும் கூட, கொலையான பழங்குடி இளைஞருக்கு இராஜாக்கண்ணு, அவருக்காக போராடும் வழக்கறிஞருக்கு சந்துரு, விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜிக்கு பெருமாள் சாமி என்று உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டிய தாங்களும், இயக்குனரும், சார்பு ஆய்வாளர்  பாத்திரத்திற்கு மட்டும் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டது ஏன்? நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்?

காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட இராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி இப்போது சென்னையில்  வாழ்ந்து வருகிறார். அவர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களில் தமது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஊராட்சித் தலைவரும், ஊர் மக்களும் தான் தமக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். அவ்வாறு இருக்கும் போது திரைப்படத்தில் ஊர் மக்களையும், ஊராட்சித் தலைவரையும் கெட்டவர்களாகவும், ஜாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்? Why do you keep your mouth open when you speak disparagingly of us ..? Big question for Anbumani ..!

கொடூர காவல் அதிகாரியாக நடித்திருப்பவர் வீட்டில் தொலைபேசும் காட்சியில்  வன்னியர்களின் புனிதச் சின்னமான அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி வைக்கப்பட்டிருந்தது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘’ஜெய் பீம் திரைப்படம் குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தில், நடிகர் சூர்யாவை சாதிவெறியர் என பூசுகிறார். அதுமட்டமல்ல, பழங்குடிகளுக்காக அவரது அய்யா போராட்டம் வேறு நடத்தினாராம். இதைவிட காமெடி ஏதாவது இருக்குமா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார். 

அதேபோல் விசிக ஆதரவாளர் மருத்துவரும், நடிகையுமான ஷர்மிளா, ‘’இதை திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்கள் வரும் போது ஏன் சொல்லவில்லை’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.  திரெளபதி, ருத்ர தாண்டவம் இது போன்ற படங்களில் ஒரு சமூகத்தை மட்டுமே முன்னிறுத்தி  மிகவும் கீழ்தரமாக பேசும்போது  அன்புமணி ஏன் அப்போது  வாயைத் திறக்கவில்லை. படைப்பு என்பது  ஒரு சமூகத்தை சார்ந்த மக்களை இழிவாக பேசுவது அல்ல தனக்கான மறுக்கப்பட்ட அநீதியை பேசுவதன் படைப்பு.

 

அன்புமணி ராமதாஸ் சாதி கட்சி நடத்துகிறார். அதனால் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக நீதிக்கான கட்சியாக இருந்திருந்தால் இவர் பல திரைப்படங்களை பாராட்டி கடிதம் எழுதி இருப்பார். ஏன் இவர் அது போன்ற படங்களை பாராட்ட வில்லை? இவர் சாதி கட்சி நடத்துகிறார். இது தான் உண்மை,

விஸ்வரூபம் என்கிற படம், திருக்குர் ஆன் தீவிரவாதத்தை போதிக்கிறது என்று அவதூறு பரப்பியதற்கு சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று  கருத்து சொன்ன பாமக நிறுவனரின் கருத்தை மறுத்து மிரட்டல் விடும் அன்புமணி அவர்களுக்கு சினிமாவை சினிமாவாக பார்க்க தெரியவில்லை.Why do you keep your mouth open when you speak disparagingly of us ..? Big question for Anbumani ..!

ஜெய் பீம் படத்தில் அந்த அக்னி கலச காலண்டர் மாற்றப்பட்ட பிறகும்கூட மிரட்டல் கடிதம் எழுதியிருக்கிறார் அன்புமணி. குருமூர்த்தி என்பது காடுவெட்டி குருவை குறிக்குமாம்! காடுவெட்டி எனும் அடைமொழியோடுதான் அவர் அறியப்பட்டார். அவர் பெயரை வம்பாக இழுப்பது அவருக்கு கெளரவம் சேர்ப்பதாகாது’’ என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios