அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்? டிடிவி தினகரன் கேள்வி!!

அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

why annamalai did not publish admk corruption list asks ttv dinakaran

அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியல் என்ன அதிர்வலையை ஏற்படுத்தும் என பொறுத்து இருந்து பார்ப்போம். ஊழல் பட்டியல் குறித்து அமைச்சர்கள் தான் கூற வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் குறித்த இறுதி முடிவு இந்தாண்டு இறுதியில் எடுக்கப்படும். திருச்சியில் ஓ.பி.எஸ் தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு என்னை அழைக்கவுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், இதுவரை என்னை சந்திக்கவில்லை, அழைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.  தமிழ்நாட்டு மக்களுக்கு இது ஒரு சிறந்த புத்தாண்டாக இருக்கும் என்றும் அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: லஞ்சம் இப்போ அன்பளிப்பா ஆகிடுச்சா? அரசியல் கோமாளி_அண்ணாமலை.. பங்கமாய் கலாய்த்த திமுக ஐடி விங்..!

முன்னதாக ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். திமுகவின் இந்த ஆட்சி மட்டுமல்லாமல், கடந்த திமுக ஆட்சியிலும் நடைபெற்ற ஊழல்களையும் வெளியிட இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். 

இதையும் படிங்க: பஞ்சாப் பதிண்டா இராணுவ முகாமில் நடந்தது பயங்கரவாத தாக்குதலா? சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலையின் இரங்கல் டுவிட்

மேலும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்.பி கனிமொழி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவையும் அண்ணாமலை வெளியிட்டார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios