லஞ்சம் இப்போ அன்பளிப்பா ஆகிடுச்சா? அரசியல் கோமாளி_அண்ணாமலை.. பங்கமாய் கலாய்த்த திமுக ஐடி விங்..!
அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரரான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராஃபேல் வாட்ச் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அண்ணாமலை கையில் கட்டியிருப்பது வெளிநாட்டு வாட்ச் என்றும், அது பல லட்சம் மதிப்புடையது என்றும் திமுகவினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரஃபேல் வாட்ச் குறித்து விளக்கமளித்த நிலையில் லஞ்சம் இப்போ அன்பளிப்பா ஆகிடுச்சா!! என்று திமுக ஐடி விங் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரரான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராஃபேல் வாட்ச் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அண்ணாமலை கையில் கட்டியிருப்பது வெளிநாட்டு வாட்ச் என்றும், அது பல லட்சம் மதிப்புடையது என்றும் திமுகவினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால், இது ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் தயாரிக்கப்பட்ட வாட்ச் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும், திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ரஃபேல் வாட்ச் பில்லை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்;- ரஃபேர் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். உலகத்தில் மொத்தமாகவே 500 வாட்சுகள் தான் உள்ளன. இந்த மாடல் வாட்ச் இந்தியாவிலேயே மொத்தமாக இரண்டு தான் விற்கப்பட்டுள்ளன. ஒன்று நான் பயன்படுத்தும் நிலையில், மற்றொன்றை மும்பையில் ஒரு பெரு நிறுவனத்தில் பணியாற்றும் நபர் பயன்படுத்தி வருகிறார் என்றார்.
நான் இந்த வாட்சை 2021ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் ரூ.3 லட்சத்திற்கு ரபேல் வாட்சை நான் வாங்கினேன். இந்த வாட்சை யாரும் இனிமேல் வாங்க முடியாது. ஏனென்றால் இந்த வாட்ச் மார்க்கெட்டில் இல்லை என தெரிவித்தார். மேலும் ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார். இதையடுத்து திமுக ஐடி விங் சார்பாக அண்ணாமலையை கிண்டல் செய்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக ஐடிவிங் டுவிட்டர் பதிவில்;- நேத்து வந்த பில்லுக்கு ஆடு இன்னும் வாய தொறக்கலியே!! #meh பிரண்ட்ஸ் உங்க கிட்ட இருக்க பில்லையும் அதோட விவரங்களையும் ரிப்ளைல போடுங்க.. மத்தவங்களும் தெரிஞ்சிக்கட்டும்.
அப்போ அந்த பில்லுலையும் பேரு இல்லையா?? லஞ்சம் இப்போ அன்பளிப்பா ஆகிடுச்சா!!
#அரசியல்கோமாளி_அண்ணாமலை என்று பதிவிட்டுள்ளனர்.
மற்றொரு பதிவில் எனவே மக்களே ஒரு பக்கா கோமாளி என்பது பெரிய LED ஸ்கிரீன் போட்டு காட்டப்பட்டுவிட்டது. அரசியல்கோமாளி அண்ணாமலை இப்போ ஸ்டார்ட் பண்ணுவோம் வீக் எண்ட் ட்ரெண்ட் #மக்கு_மலை என்று திமுக ஐடி விங் போஸ்ட் செய்துள்ளது.