நேற்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எக்ஸிட் போல் ரிசல்டில் தேமுதிக ஒரு தொகுதியில் ஜெயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அது தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி அல்லது விழுப்புரத்தில் நின்ற வடிவேல் ராவணன் இருவரில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

 அதிமுக கூட்டணியில் பாமக 7 தொகுதிகளை பெற்றுள்ளது, பாஜக 5 , தேமுதிக 4 தொகுதிகளையும், புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி, NR.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 தொகுதியை பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது அதிமுக கூட்டணி.  

அதிமுக கூட்டணி யில் இடம்பிடித்துள்ள, பாமக தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம்,கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏழு தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அதில், தருமபுரியில் அன்புமணியும், விழுப்புரத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனும் போட்டியிட்டனர். 

இந்நிலையில், இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த தேர்தல் முடிவுக்குப் பின், தமிழகத்தில் எந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றுமென எக்ஸிட் போல் ரிசல்ட் வெளியானது. அதில்,  நியூஸ் எக்ஸ்  குறைந்தது 34 மக்களவை தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 38 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிமுகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காமலும் போகலாம், அல்லது அதிகபட்சம் 4 தொகுதிகள் வரை தான் கிடைக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக கூட்டணிக்கு 38 இடங்களில் மொத்தம் 22 முதல் 24 இடங்கள் வரை கிடைக்கும். அதில், தி.மு.க 12-14 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3-5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிகிறது. காங்கிரஸ் 10ல் 7 இடங்கள் வரை படு தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது.  காங்கிரஸ் இழக்கும் இந்த தொகுதிகள் அனைத்தும் அப்படியே அதிமுக ஜெயிக்கும்.  அதிமுக கூட்டணிக்கு 14 முதல் 16 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸிட் போல் ரிசல்டில் ,அதிமுக 8-10 தொகுதிகளிலும், பாஜக 1-2 தொகுதிகளிலும், பா.ம.க 2-4 தொகுதிகளிலும், தேமுதிக 1-2 தொகுதிகளிலும் ஜெயிக்க வாய்ப்புள்ளது. 

இந்நிலையில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பாமகவுக்கு போனஸ் பாயிண்ட்டாக ஒரு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படும் என பிஜேபி சொன்னது.  இதனால் குஷியான பாமகவும் நிர்வாகிகள் களத்தில் தேஈயாக வேலை பார்த்தது.  ஆனால் ஏழு தொகுதிகளிலும் வேலை பார்க்காமல், இடைத் தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தியதாலும், தேமுதிக பழைய பகையை மனதில் வைத்து உள்ளடி வேளைகளில் இறங்கிய கூத்தும் அரங்கேறியது. அன்புமணி தொகுதியிலேயே திமுக வெயிட்டான வேட்பாளரை நிறுத்தி பயம் டஃப் பைட் கொடுத்ததும் நடந்தது.

அதில் நியூஸ் எக்ஸ் நிறுவனத்தின் கருத்து கணிப்புகளின்படி, பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட வடிவேல் ராவணனும், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணியும் வெல்ல வாய்ப்புள்ளது. மற்ற 5 தொகுதிகளில் பாமக தோற்கும் என கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதனால் பாஜக உறுதியளித்தபடி அக்கட்சிக்கு மாநிலங்களவை எம்பி கிடைக்காது என்றே தெரிகிறது. எக்ஸிட் போல் ரிசல்டில் 7 இடங்களில் போட்டியிட்ட பாமகவும் விழுப்புரம் அல்லது தருமபரியில் வெல்ல வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.