தென்மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி நிச்சயம் அமையும் என்று கூறினார்.

மேலும், ஓவைசியோடு கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம். டார்ச் லைட் சின்னம் முடக்கப்பட்ட விவகாரம் குறித்து  நான்கு அல்லது 5 நாட்களில் நீதிமன்றத்தை நாடுவோம். வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மாற்றத்தை நிகழ்த்துவார்கள். மக்கள் சக்தியை நம்பியே நாங்கள் களம் இறங்குகிறோம்.

எங்கள் கட்சி, யாருக்கும் பி.டீம் அல்ல. நாங்கள் எப்போதும் எங்களுக்கு ஏ டீம்தான். தேர்தல் வாக்குறுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இலவசமாக வழங்குவது உள்ளிட்டவைகள் இடம்பெறும்’’என்று தெரிவித்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு. சம நீதியும், சமூக நீதியும் இல்லாத, ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ‘ஒரே’என்று சொல்வதே பெரும் அநீதி!’’எனத் தெரிவித்தார்.