Asianet News TamilAsianet News Tamil

இதெல்லாம் யாரை திருப்திப்படுத்த செய்யுறீங்க.. யாருடைய தூண்டுதல் காரணம்.. எடப்பாடியைத் திணறடிக்கும் திமுக.!

பெரியார், காமராஜர், அண்ணா ஆகிய தலைவர்களின் பெயரை ஏன் மறைக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாருடைய தூண்டுதலில், யாரை திருப்திப்படுத்த இதையெல்லாம் செய்கிறார்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Who should do all this to satisfy .. Whose motivation is the reason .. DMK to stifle Edappadi.!
Author
Chennai, First Published Apr 15, 2021, 8:29 PM IST

சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றும் அண்ணா சாலை கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு என்றும், கடற்கரை காமராசர் சாலை கிராண்ட் நார்தன் டிரங்க் ரோடு எனவும் நெடுஞ்சாலை துறையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பெரியார் ஈ.வெ.ரா. சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கே நெடுஞ்சாலைத் துறை உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை பெயரும்  மாற்றப்பட்டிருப்பது சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.Who should do all this to satisfy .. Whose motivation is the reason .. DMK to stifle Edappadi.!
இந்தப் பெயர் மாற்றங்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று இந்த விவகாரம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்ட செயலாளர் வில்சன், தலைமை சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் தலைமைச் செயலாளரை சந்தித்து பேசினர். அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொடுத்திருந்த மனுவை அவரிடம் அளித்தனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஆலந்தூர் பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.Who should do all this to satisfy .. Whose motivation is the reason .. DMK to stifle Edappadi.!
அப்போது அவர் கூறுகையில், “சாலைகள் பெயர் மாற்றம் குறித்து அரசிடமிருந்து தெளிவான விளக்கம் எதுவும் வரவில்லை. இதுதொடர்பாக திமுக தலைவர் கொடுத்த மனுவை தலைமைச் செயலாளரிடம் கொடுத்தோம். இந்த மூன்று தலைவர்களின் பெயரை ஏன் மறைக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாருடைய தூண்டுதலில், யாரை திருப்திப்படுத்த இதையெல்லாம் செய்கிறீர்கள்?சென்னை விமான நிலையத்துக்கு காமராஜர், அண்ணா பெயரை கருணாநிதி கோரிக்கையின் பேரில் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் சூட்டினார். அந்தப் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன” என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்திருந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios