கல்வான் பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடுவதில் உண்மை இருக்கிறது. அந்த பள்ளத்தாக்கு இந்தியாவிற்கானது. 200 ஆண்டுகளாக கல்வான் இந்தியாவின் வசம் உள்ளது என்று  குலாம் ரசூல் கால்வனின் பேரன் அமீன் கால்வன் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் கால்வான் பள்ளத்தாக்கில் ஏராளமான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. போர் ஒரு தீர்வு அல்ல, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.மேலும் அவர் பேசும் போது..

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன மக்கள் விடுதலை இராணுவமும் மோதல்களின் போது பலத்த உயிரிழப்புகளை சந்தித்தது. மக்கள் சற்று பயப்படுகிறார்கள், ஆனால் பயப்படத் தேவையில்லை. லடாக் மக்கள் எப்போதுமே நம் இராணுவத்தை ஆதரித்து வருகிறார்கள். பாகிஸ்தானுடனான போரின்போதும் இது நடந்தது. எனவே லடாக் மக்கள் நம் இராணுவத்தை இனி வரும் காலங்களிலும் ஆதரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

பிரிட்டிஷ் காலத்தில், இப்பகுதிக்கு கால்வன் ரசூல் அல்லது கால்வன் நாலா என்று பெயரிடப்பட்டது. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. 1962ஆம் ஆண்டில், சீனர்கள் அந்த பகுதிக்குள் நுழைந்தனர். நம் துணிச்சலான வீரர்கள் அவர்களை பின்னுக்குத் தள்ளினர். இந்த நாட்களில் அந்த பகுதியில் ஏராளமான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எங்கள் ஜவான்கள் தங்கள் பகுதியில் நிற்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது, அது அப்படியே இருக்கும்.என்கிறார் அவர்.