நாட்டின் பிரதமர் யார் மோடியா?, அல்லது அமித் ஷாவா? என்று மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமக விமர்சித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது-

நான் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன், ஆனால், பா.ஜனதா கட்சியின் தலைவர்அமித் ஷாவை ஆதரிக்கவில்லை. ஏன் நான் மோடியை குறை கூற வேண்டும்? அவரை அவரின் கட்சிதான் அவரை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசின் நிர்வாக விவகாரங்களில் பா.ஜனதா கட்சியிந் தலைவர் அமித் ஷா தலையிடுவதால், நாட்டில் கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சி நடக்கும் சூழல் நிலவுகிறது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்தான். ஆனால் நடுநிலையாக, யாருக்கும் சார்பில்லாமல் நடப்பவர்.நான் அவரின் ஆட்சியில் பணியாற்றியபோது, ஒருபோதும் பிரச்சனையை சந்தித்து இல்லை.

இப்போது நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பா.ஜனதா கட்சியும் அதன் தலைவருமே காரணம், பிரதமர் மோடி அல்ல. ஆனால், ஏன் இன்று பிரச்சினைகளை நாம் சந்திக்கிறோம்?. நான் பிரதமரை குறை சொல்ல விரும்பவில்லை. அவரின் கட்சிதான் இதற்கு கவனம் செலுத்த வேண்டும். பாஜனதா கட்சி ஒவ்வொருவரிடமும் பிரச்சினையை உருவாக்குகிறது.

மத்திய அமைச்சர்கள் கூட்டத்தை பா.ஜனதா கட்சியின் தலைவர அமித் ஷா கூட்டியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொடுங்கோல்சர்வாதிகாரத்துவம் நடந்து வருகிறது. எப்படி ஒரு கட்சியின் தலைவர் அமைச்சர்கள் கூட்டத்தை கூட்ட முடியும்?. நாட்டின் பிரதமர் மோடியா அல்லதுஅமித் ஷாவா?.

எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரே தளத்தில் ஒன்றாக வந்துள்ளோம், 2019ம் ஆண்டில் நிச்சயம் மாற்றம் இருக்கும். அந்த மாற்றத்துக்காக காத்திருக்கிறோம். இதுவரை எந்த கூட்டணியும் அமைக்கப்படவில்லை,எதிர்க்கட்சிகள் ஒரே தளத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கிவிட்டன. 6 மாதத்தில் அனைத்தும்தௌிவாகிவிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.