கலைஞர் கருணாநிதியின் நல்லடக்கத்தின் போது அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே அருகில் நின்றிருந்தனர். அவர்களுக்கு மட்டுமே அருகில் நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், கருணாநிதியின் நெருங்கிய சொந்தங்கள், மிகவும் நெருக்கமான நண்பர்கள் ஆகியோரின் இடையே  நின்றிருந்த ஒரு சாதாரண மனிதர் அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் என்றுதான் கூற வேண்டும். கருணாநிதிக்கு எந்தவகையிலாவது சொந்தக்காரராக இருப்பார் என்றே பலரும் அவரை குறித்து தாமாக கணித்து கொண்டனர். 

ஆனால் அவர் கருணாநிதியின் உறவின் முறையில் சொந்தக்காரர் அல்ல. ஆனால் அவர் மீது வைத்த பாசத்தால் பந்தம் உருவாக்கி கொண்டவர். வெள்ளை சட்டையணிந்து மிகவும் அமைதியாக நின்றிருந்த அந்த நபரின் பெயர் நித்யானந்த். 

இவர் தான் கலைஞருடைய வாழ்க்கையில் கடைசி காலத்தில் பணிவிடைகள் செய்து வந்தவர். ஒரு கட்டத்தின் கருணாநிதிக்கு முதுமை காரணமாக தன்னுடைய வேலைகளை தானே செய்வதற்கு உடல் ஒத்துழைக்காமல் போன போது , இவர் தான் எல்லாமக இருந்து பணிவிடைகள் செய்திருக்கிறார். கடைமைக்காக என்றில்லாமல் மிகவும் ஆதமார்த்தமாக கலைஞரை கவனித்து கொண்டதால், கலைஞரின் அன்புக்கும் அவரது வீட்டாரின் அன்பிற்கும் பாத்திரமாக இருந்திருக்கிறார் இந்த நபர்.

கலைஞருக்கு உடல் நிலை சீரியசாக இருந்து மருத்துவமனையில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது கூட , ஐயாவை எப்படியாவது காப்பாற்றி வீட்டிற்கு கொண்டுவந்துவிடுங்கள். அவரை இன்னும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பத்திரமாக பார்த்துக்கொள்ளுவேன் என உருகி இருக்கிறார் நித்யானந்த்.

கருணாநிதியின் வாழ்வில் நித்யானந்த் வந்த பிறகு அவர் தினமும் உறங்க செல்லும் முன் பார்ப்பதும் அவர் முகத்தை தான் . விழிக்கும் போது கேட்பதும் அவர் குரலை தான். கருணாநிதி கூடவே எல்லா நேரமும் இருந்து கலைஞரை கவனித்து கொண்ட நித்யானந்திற்கு கலைஞர் இல்லாததால் உண்டான வெறுமை கூடுதல் வலியை கொடுத்திருக்கும் என்பது அவரின் முகத்தை பார்க்கும் போதே தெரிகிறது.