தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி ம.நடராஜன் பிறந்தார். 

மாணவர் பருவத்திலேயே தமிழ் மீது நடராசனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து 1965 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் பெரும் பங்காற்றினார். 

கல்லூரி காலத்தில் தஞ்சையில் மாணவர்களை திரட்டி போராட்டங்களை  முன்னெடுத்து நடத்தியவர் நடராசன். 

மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அண்ணாவின் கவனத்தை ஈர்த்த நடராசன் 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். 

இதையடுத்து 1975 ஆம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த சசிகலாவை திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். 

சந்திரலேகா மூலம் நடராசன்- சசிகலா தம்பதிக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. நடராசன் காலப்போக்கில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். 

1985-ல் நேரடி அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக நடராசன் செயல்பட்டார்.