’சினிமாவுக்குள் நுழைவத்ற்கு முன் அரசியலின் எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் சினிமாவுக்குள் வந்தபின் அதிலிருந்து விலகி நின்றேன். இருந்தாலும் என் படங்களுக்கு சிக்கல்கள் வந்தன. சினிமாவில் அரசியல் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது!’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின் மகன் உதயநிதி. சினிமா வண்டியை ஓட்டிக் கொண்டே அரசியல் ஃபிளைட்டில் கர்சீப்பை போட கிட்டத்தட்ட ரெடியாகிவிட்டார் என்று தெரிகிறது.

மு.க. குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறை அரசியலுக்கு வர எத்தனிக்கிறது என்பது இந்நேரத்தில் தெளிவாகிறது. ஆனாலும் ஸ்.உதயநிதிக்கு முன்பாகவே அவரது பெரியப்பா மகனும், தம்பியுமான அ. துரை தயாநிதி எப்போதோ இருந்தே அரசியல் டச்சுடன் இருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உதயநிதி குறுகிய காலத்தில் நேரடி அரசியலில் குதிக்க நேரிடும் எனும் பட்சத்தில் தயாவும் பாலிடிக்ஸ் கிரவுண்டில் நிச்சயம் குதிப்பார் என்றே உறுதியான தகவல்.

கருணாநிதியின் இரு பேரன்களில் யார்  கில்லியாக இருக்க வாய்ப்பிருக்கிறது? என்று தகதக வழக்காடு மன்றத்துக்கு தயாராகிவிடனர் தி.மு.க. புள்ளிகள். நாம் அதற்குள் இருவரையும் வைத்து செம அனலைஸ் ரேஸை நடத்திடலாமா?!...

உதயநிதியை பொறுத்தவரை அவங்க அப்பா மாதிரியே மிஸ்டர். சைலண்ட் பார்ட்டி. சில நேரங்களில் டாடி போலவே அமுக்குனியாகவுமிருந்து காரியங்களை சாதிப்பவர். தயாவோ தந்தையை போலவே செம்ம தடாலடி பேர்வழி.

சினிமாவுக்குள் நுழையும் முன் முரசொலி பேப்பரின் முக்கிய பொறுப்பில் இருந்த வகையில் தவிர்க்க வழியே இல்லாமல் அரசியலை அப்டேட் செய்து கொண்டிருந்தவர் உதயநிதி. தயாவின் ட்விட்டர்களே அவர் அரசியலை எந்தளவுக்கு கவனிக்கிறார் என்று சொல்லும். சமீபத்தில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக டாக்டர் சரவணன் நிறுத்தப்பட்டதை விமர்சித்து தயாநிதி தெறிக்கவிட்ட ட்விட்டர் தி.மு.க.வின் பிராண்ட் ஸ்லோகங்களான ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பனவற்றில் மூன்றாவதை அலறவைத்தது.

ஸ்டாலினின் பிரச்சார மேடைகளில் உதயநிதி ஏறும் வழக்கைம் வைத்ததில்லை. தன் அப்பாவுக்காக கேன்வாஸிங்கில் ஜாலியாக கலக்கியெடுத்த அனுபவம் தயாவுக்கு உண்டு.

அன்பில் பொய்யாமொழி எப்படி ஸ்டாலினின் நிழலாக இருந்த நண்பனோ அதேபோல்தான் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.வும் உதயநிதியின் நிழல் எனலாம். தயாவின் மதுரை நண்பர்கள் பட்டாத்தில் அதிரடி யூத்களின் தலைகள் உண்டு.

ஸ்டாலினின் வலது, இடது கரங்களாக நிற்கும் மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு உள்ளிட்ட அரசியல் புள்ளிகள் யாரையும் உதயநிதி தன்னை சுற்றி நிற்க அனுமதித்ததில்லை. தன் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த மகேஷை கூட அவர் அரசியலுக்குள் கால் வைத்த பின் உதயநிதி தன் பக்கத்தில் அதிகம் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் அழகிரியின் பாதுகாப்பு படையினரான மன்னன், எஸ்ஸார் கோபி , முபாரக் மந்திரி போன்றவர்கள் தயாவின் பாதுகாப்பிலும் தாராளமாய் விசுவாசம் காட்டுவார்கள்.

தாத்தா கலைஞரிடம் ஸ்டாலின் போலவே பம்மி பேசும் குணம் உதய்க்கு, தன் அப்பா அழகிரி போலவே தாத்தாவிடம் அதிரடியாய் கருத்துக்களை வைப்பார் தயா. அப்பாவை கட்சியிலிருந்து நீக்கி வைத்த சமயத்தில் எந்த தயக்கமுமில்லாமல் தாத்தாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மதுரை வீரந்தான் தயா.

உதயநிதி தயாரிப்பாளராக இருந்து ஹீரோவாக ப்ரமோஷன் ஆனவர். தயாவை நடிக்க சொல்லி அவரது நண்பர் பட்டாளம் உசுப்பேற்றினாலும் தயாரிப்போடு நின்று கொண்டார். இது போக கிரிக்கெட்டில் கில்லி.

முத்தமிழறிஞர் கலைஞரின் இந்த இரு பேரன்களும் ஆளுக்கொரு சினிமா தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறார்கள். உதயநிதியின் நிறுவனத்தின் பெயர் ரெட்ஜெயன் மூவிஸ். தயாநிதியின் நிறுவன பெயர் கிளவுட் நைன் மூவிஸ். (வாழ்க தமிழ்)

உதயநிதி, தயாநிதி இருவருமே லவ் பண்ணி திருமணம் செய்து கொண்டவர்கள்.

உதயநிதியின் மனைவி கிருத்திகா ஒரு சினிமா இயக்குநர். வணக்கம் சென்னை முதல் படம். விஜய் ஆண்டனி நடிக்க இரண்டாம் படம் ஆரம்பமாகிறது. தயாவின் மனைவி அனுஷா செம சிங்கர். தயா தயாரித்த தரமாஸ் படமான மங்காத்தாவில் இவர் பாடிய பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்.

ஸ்டாலினின் மகன் என்ற வகையில் உதயநிதியின்  படங்கள் ரிலீஸாகும் போது சென்சார், வரி விலக்கு உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகி சர்ச்சையில் சிக்குவார். ப்ரொடியூசர் என்ற வகையில் தயாநிதியை பொறுத்தவரையிலும் இந்த பிரச்னைகள் உண்டு. இது போக கிரானைட் தொழில் சம்பந்தமானது உள்ளிட்ட இரண்டு மெகா வழக்குகள் சில வருடங்களுக்கு முன் துரை தயாநிதியை துரத்தின.

ஸ்டாலினை போலவே அதிரடி வைபரேஷன்கள் இல்லாமல் எப்போதுமே உதயநிதியின் கிராஃப் ஸ்டெடியாக இருந்து கொண்டே இருக்கும். அழகிரி போலவே துரை தயாநிதி திடீரென அதிரடியாய் வெளிப்படுவார் பின் சைலண்டாகிவிடுவார். இவரது இருப்பு பற்றிய வைபரேஷன் ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும்.

இதுதான் இருவரின் பப்ளிக் ப்ரொஃபைல். ஆக அரசியலில் கால் வைத்தால் யார் நின்று விளையாடுவார்கள் என்பதை இவர்களின் பர்ஷனல் கேரக்டர்கள் போக காலமும் தீர்மாணிக்கும்.