43 ஆண்டுகளாக திமுக பொதுச்செயலாளராக இந்து வந்த பேராசிரியர் க.அன்பழகன் மறைவை அடுத்து அடுத்த பொதுசெயலாளராக யார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

கழகத்தின் தலைவர் பதவிக்கு அடுத்து முக்கியமான பதவி பொதுசெயலாளர். கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் பொதுச்செயாலாளர் உத்தரவின்றி நடைபெறாது. ஆகையால் அந்தப்பதவியை மு.க.ஸ்டாலின் யாருக்கு வழங்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சீனியர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்கிற கருத்தும் எழுந்துள்ளது. அப்படிப்பார்த்தால் கட்சியின் சீனியரான துரைமுருகனுக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆக அவருக்கு இந்தப்பதவியை ஸ்டாலின் வழங்க மாட்டார்.

 

தி.மு.க-வின் முதன்மைச் செயலராக இருந்து வந்தவர் டி.ஆர் பாலு. அவரிடமிருந்த பதவியை, கட்சித் தலைமை பறித்து சமீபத்தில் கே.என்.நேருவுக்கு வழங்கப்பட்டது. டி.ஆர்.பாலு மீது இருந்த அதிருப்தியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவருக்கு பொதுசெயலாளர் பதவி வழங்க ஸ்டாலின் விரும்ப மாட்டார். அடுத்து பொன்முடிக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்றால் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார் ஸ்டாலின். விக்ரவாண்டி தொகுதி  இடைத்தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பிருந்தும் அதனை நழுவ விட்டதாலும், ஏற்கெனவே அவரது மகன் கவுதம சிகாமணிக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளதாலும் அவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள். 

எ.வ. வேலு பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க கடுமையாக முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. பொருளாளர் பதவியை பிடிக்க கடும் முயற்சி செய்து அது வேலுவுக்கு கிடைக்காமல் போனது. மற்றவர்களை விட, எ.வ.வேலு ஸ்டாலினுக்கு மட்டுமின்றி, அவரது குடும்பத்தினர் அனைவருடனும் நெருக்கம் காட்டி வருகிறார். சித்தரஞ்சன் சாலை வீட்டில் சமையல் சாமன்கள் முதல், ஆடம்பரப்பொருட்கள் வரை அனைத்துக்கும் பில் செட்டில் செய்வது இவரே. அந்த வகையில் ஸ்டாலின் வீட்டு தலைவிக்கும் விசுவாசத்தை காட்டி வருபவர். ஸ்டாலின் எங்கு சென்றாலும் உடன் செல்பவர் இந்த எ.வ.வேலு. ஆகையால் எ.வ.வேலு அடுத்த பொதுச்செயலாளர் ஆகலாம் எனக் கூறுகிறார்கள். 

இன்னொரு தரப்போபொதுசெயலாளர் பதவியை மு.க.ஸ்டாலினே கூடுதலாக வைத்துக் கொள்வார். அந்தப் பதவியை வேறொருவருக்கு கொடுத்து கட்சியில் மற்ற நிர்வாகிகளின் மனதை புண்படுத்தாமல் இருக்க  தானே வைத்துக் கொள்ளலாம் என்கிற முடிவில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.