Asianet News TamilAsianet News Tamil

யார் அந்த பாஸ்கர் நாயுடு ? - சூடு பிடிக்கிறது விவேக் ராம்மோகன் ராவின் ரூ.500 கோடி காண்ட்ராக்ட் 

who is-baskar-naidu
Author
First Published Dec 26, 2016, 2:18 AM IST


அரசு மருத்துவமனைகள் செக்யூரிட்டி சர்வீஸ் என கோடிக்கணகான ரூபாய் காண்ட்ராக்ட்  எடுத்த விவேக் ராம் மோகன் ராவ் கம்பெனி பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறையினரிடம் சிக்காத புதிய நபர் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 
ராம் மோகன ராவ் தலைமை செயலாளராக இருப்பதை பயன்படுத்தி அவரது மகனை தனது செல்வாக்கின் மூலம் பல காண்ட்ராக்டுகளை  பெற்று தந்துள்ளார். இதை பயன்படுத்தி அவரது மகன் பல கம்பெனிகளை துவக்கி பலநூறு கோடி காண்ட்ராக்டுகளை எடுத்துள்ளார்.

who is-baskar-naidu
முறைகேடுகளாக ஐஏஎஸ் அதிகாரி விதியை மீறி மகன் கம்பெனி துவக்கவும் காண்ட்ராக்ட் எடுக்கவும் ராம்மோகன் ராவ் உதவ அவரையும் தாண்டி பல நூறு கோடி ( ஆயிரத்தை எட்டும் என்கிறார்கள் )சம்பாதிக்க , பல கம்பெனிகள் வேறு வேறு பெயர்களில் சிக்கியது. 
அவைகளில் சில கம்பெனிகளின் பெயர்கள் :  1 .LOK INFRA AND LOGISTICS PRIVATE LIMITED , 2.  TRANS EARTH LOGISTICS PRIVATE LIMITED, 3. TRANS EARTH LOGISTICS TECH SOLUTIONSPRIVATE LIMITED , 4. TEL KARAIKAL LOGISTICS PRIVATE LIMITED ,5.  SWAN FACILITY SERVICES PRIVATE LIMITED , 5.  BLUE OCEAN PERSONNEL & ALLIED SERVICESPRIVATE LIMITED 
ராமமோகன் ராவுக்கு சிக்கலே அவரது மகன் தான் என்கிற அளவுக்கு அவ்வளவு கம்பெனிகள். இன்னும் தோண்ட தோண்ட புதயலாய் எவ்வளவோ நிறுவனங்கள் பார்ட்னர்கள் உள்ளனர். அவ்வளவு பேர் , பெயர் விபரங்களை வருமான வரித்துறையினர் சேகரித்து வருகின்றனர். அவர்களுக்கு பத்திரிக்கையாளர்களும் உதவும் நோக்கில் ஹிட்டன் பார்ட்னர்களை அடையாளம் காண்பிக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. 


முதல் கட்டமாக தமிழகம் முழுதும் உள்ள  மருத்துவமனைகள் , தமிழ்நாடு சுற்றுலாத்துறை , ரெயில்வே துறை ரிலையன்ஸ் , சாஃப்ட்வேர் கம்பெனிகளில் “  பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி&ஃபெசிலிட்டி மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் “” என்ற பெயரில் கம்பெனி ஒன்று காண்ட்ராக்ட் எடுத்தது. சுமார்  500 கோடி ரூபாய் பெறுமான  அரசு காண்ட்ராக்டுகளை அந்த கம்பெனி எடுத்துள்ளது. 

who is-baskar-naidu

சரி அதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். அந்த கம்பெனி விவேக் ராம்மோகன்ராவுக்கு சொந்தமானது என்ற தகவல் அரசல் புரசலாக பேசப்பட்டது , உறுதியாகி உள்ளது. அந்த நிறுவனத்தின் எம்டியாக பாஸ்கர் நாயுடு என்பவர் இருக்கிறார். ஆனால் அந்த பாஸ்கர் நாயுடு யார் எனபது தான் மர்மம். 

who is-baskar-naidu
பாஸ்கர் நாயுடு விவேக் ராம்மோகனராவின் நிறுவனமான ஸ்வான் ஃபெசிலிட்டி நிறுவனத்தில் கூடுதல் இயக்குனர் ஆவார். ஆனால் விவேக் மற்றும் அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியபோது பாஸ்கர் நாயுடு என்கிற நபரே காட்சியில் வரவில்லை. தற்போது பாஸ்கர நாயுடு என்பவருக்கும் , விவேக் மோகனராவுக்கும் உள்ள தொடர்பை டைம்ஸ் நவ் ஆங்கில சானல் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

who is-baskar-naidu
தமிழகம் முழுதும் அரசு மருத்துவமனைகளில் செக்யூரிட்டிகள் , ஹவுஸ் கீப்பர்கள் என பல்லாயிரக்கணக்கில் ஆட்களை வேலைக்கு அமர்த்தி பல போர்ஜரி கணக்குகளை உருவாக்கி நடந்த முறைகேடுகளும் வெளிவர உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. 
வெகு சாமர்த்தியமாக வேறு வேறு நபர்கள் வேறு வேறு கம்பெனிகள் என நடத்திய விவேக் மோகன் ராவின் கூட்டாளிகள் ஒவ்வொருவராக சிக்கி வருகின்றனர். அமைச்சர்களின் மகன்கள் , மேயரின் மகன் , முன்னாள் கவர்னர் ஒருவரின் மகன் என பட்டியல் நீள்கிறது. அனைத்தையும் வருமான வரித்துறையினர் சேகரித்து வருகின்றனர். 
பாஸ்கர நாயுடு யார் , அவருடன் கம்பெனியின் நிர்வாகிகளாக உள்ள , பிரதீப் கனுமுரி , சந்தீப் கனுமுரி , சாவன் குமார் ஆகியோர் யார்? . அவர்கள்  வருமான வரித்துறையின் விசாரணை வளையத்துக்குள் எப்போது கொண்டு வரப்படுவார்கள்  என்பது அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும். 
அடுத்து சென்னையில் கட்டிட காண்ட்ராக்டில் விதிமீறல் குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரிக்க உள்ளனராம். அதில் முக்கிய பிரமுகர்கள் மகன்கள் விவேக்குடன் பார்ட்னர்களாக இருக்கும் உண்மை வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios